கிரிக்கெட்டைப் பொறுத்தவரை என்றுமே வல்லரசாக திகழ்ந்துவரும் இந்தியா, மற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் கவனம் செலுத்தும் விதமாக பாரிஸில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி குறிப்பிடத்தக் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் சச்சின் டெண்டுல்கர், எம் எஸ் தோனி விராட் கோலி மற்றும் தடகள வீரர் நீரஜ் சோப்ரா இவர்களைவிட இந்தியா உருவாக்கிய சிறந்து விளையாட்டு வீரர் இவர்தான் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
கிரிக்கெட்டை பொருத்தவரை 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகை கோப்பையை வென்ற வரலாறு படைத்தது. அதற்குப் பிறகு மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையும், 2011ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையும் வென்றது.
மேலும் கிரிக்கெட்டை தவிர தற்போது நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்காக வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் மனோ பாக்கர் மற்றும் இன்னும் பிற வீரர்கள் திறமையாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்தனர். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியா உருவாக்கிய சிறந்த விளையாட்டு வீரராக 69 வயதான பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனை இந்தியா உருவாக்கிய சிறந்த விளையாட்டு வீரராக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எனது தாழ்மையான கருத்துப்படி மற்ற விளையாட்டுக்களின் ஜாம்பவான்கள் மற்றும் மற்ற விளையாட்டுக்களில் உள்ள சாம்பியன்களின் மரியாதையுடன் பிரகாஷ் படுகோனேவை இந்தியா உருவாக்கிய சிறந்த விளையாட்டு வீரராக குறிப்பிடுகிறேன். அவரது நம்ப முடியாத திறமையினால் பேட்மிண்டன் தொடரை மீண்டும் மீண்டும் இந்தியாவுக்காக வென்று கொடுத்திருக்கிறார்.
ஆனால் இது மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் அவரது நடத்தை எனது பார்வையில் அவரை மிகவும் சிறப்பானவராக ஆக்குகிறது. குறிப்பாக ஒரு போட்டியில் ஒரு புள்ளியை உங்கள் சர்வீஸில் மட்டுமே எடுக்க முடியும் என்கிற நேரத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வென்று கொடுத்திருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம். சீன விளையாட்டு வீரர்களை தோற்கடிக்க முடியாத நேரத்தில் பிரகாஷ் அவர்களை தோற்கடித்து வழி அனுப்பி வைத்திருக்கிறார். இதில் அரிதாகவே ஏழு முதல் 10 புள்ளிகளை விட்டுக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அது எல்லா நேரங்களிலும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:5 நாளில் வரும் அந்த மினி ஐபிஎல் தொடரில்.. இஷாந்த் சர்மா உங்க ஓவரில் சிக்ஸர் அடிப்பேன் – பதோனி பேட்டி
பிரகாஷ் படுகோனே 1980ஆம் ஆண்டு ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷ்ஷிப் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். அதே ஆண்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் 1981ஆம் ஆண்டு உலக கோப்பையில் தங்கப் பதக்கத்தையும் 83ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கமும் வென்றிருக்கிறார்.