இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக டெல்லி பிரிமியர் லீக் என்னும் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரின் வளரும் நட்சத்திர வீரரான ஆயுஸ் பதோனி இசாந்த் சர்மாவின் பந்துவீச்சில் சிக்சர் அடிப்பேன் என்று சவால் விடுத்திருக்கிறார்.
டெல்லி பிரீமியர் லீக் எனப்படும் டிபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் தொடங்க இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் ஐபிஎல்லின் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியில் வளரும் நட்சத்திர வீரரான ஆயுஸ் பதோனி இந்த தொடரில் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடவிருக்கிறார். மேலும் அனுப பந்து பந்துவீச்சாளரான இசாந்த் சர்மா புராணி டில்லி சிக்ஸ் அணிக்காக கையொப்பமிட்டு இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே ஆயுஸ் பதோனி ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக நன்றாக செயல்பட்டு அதிக கவனம் பெற்று வரும் வீரராக இருக்கிறார். முந்தைய சீசன்கள் அவருக்கு சரியாக அமையாவிட்டாலும், கடந்த சீசன் அவரது பேட்டிங் திறமையை ஓரளவு நன்றாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் ஆயுஸ் பதோனி இந்த டிபிஎல் தொடர் மினி ஐபிஎல் போன்றது என்றும் மேலும் அனுபவ வீரர் இஷாந்த் சர்மா குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து பதோனி விரிவாக கூறும்போது “டெல்லி பிரிமியர் லீக் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் தொடராக இருக்கிறது. என்னை பொருத்தவரை மினி ஐபிஎல் தொடர் போல இருக்கும். இது போன்ற தொடர்களில் விளையாடும் போது எப்போதுமே தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அது எனக்கு மட்டுமல்லாமல் மற்ற டெல்லி கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறப்பானதாக இருக்கும்.
இதில் எனக்கு ஆர்வம் அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் இஷாந்த் ஷர்மாவுக்கு எதிராக விளையாடுவதுதான். கிரிக்கெட் விளையாடும் போது எங்கள் இருவருக்கும் இடையே எப்போதும் கேலிப் பேச்சுக்கள் இருக்கும். அவர் என்னை ஆட்டமிழக்கச் செய்வேன் என்று சொல்வார். நானும் அவருக்கு எதிராக சிக்சர்களை அடிப்பேன் என்று அவரிடம் கூறுவேன். அவருக்கு எதிராக விளையாட போகிறது ரொம்ப ஜாலியாக இருக்கும். டெல்லி கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள்.
இதையும் படிங்க:கோலி கிட்ட 19 வயசு பையனும் நெருங்க முடியாது.. ரோகித்த விட 3 வருஷம் இருக்கு – ஹர்பஜன் சிங் பேச்சு
அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த டிபிஎல் தொடர் விறுவிறுப்பாகவும், அதே நேரத்தில் ஜாலியாக சுவாரசியமாகவும் இருக்கும். மேலும் அனுபவ வீரரான தவான் என்னை எப்போதும் தொடர்பு கொண்டு பேசுவது உண்டு. தவானிடம் அணி குறித்தும் நாங்கள் தயாராகும் விதம் குறித்தும் கருத்துக்களை பகிர்வதுண்டு. தவான் எங்கள் அணி குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். சூழ்நிலை மிகவும் நிதானமாக இருக்கிறது. எனவே நாங்கள் சிறப்பாக விளையாடி இந்த டிபிஎல் தொடரை கைப்பற்றுவதில் ஆர்வமாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






