இந்திய கிரிக்கெட் அணி தற்போது தொடர்ந்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்திருக்கிறது. இதற்கு காரணம் இந்திய கிரிக்கெட்டில் உள்ள கட்டமைப்பு தான் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும் பிசிசிஐ பல போட்டிகளை நடத்தி வீரர்களை கண்டெடுத்து வருகிறது.
குறிப்பாக ஐபிஎல் தொடர் மூலம் பல வீரர்களின் திறமை வெளியாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் கவாஸ்கர் ஒரு கோரிக்கை எடுத்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது ரஞ்சி போட்டிக்கான வீரர்களின் ஊதியத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.
ரஞ்சிக்கு ஊதியம் குறைவு:
ஏனென்றால் சாதாரண வீரர் கூட அதிர்ஷ்டம் காரணமாக ஐபிஎல் தொடரில் தேர்வாகி பல கோடிகளை சம்பாதிக்கிறார்கள். ஆனால் பல வீரர்கள் கடுமையாக உழைத்து ரஞ்சிப் போட்டிகளில் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதியம் குறைவாக இருக்கிறது.
உதாரணத்திற்கு மும்பை கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ வழங்கும் அதே பணத்தை மாநில சங்கம் சார்பாக இரண்டாவது சம்பளமாக வழங்குகிறார்கள்.இதன் மூலம் வீரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கின்றது.இதை ஒவ்வொரு கிரிக்கெட் சங்கமும் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிரிக்கெட் சங்கமும் பிசிசிஐ இடம் இருந்து பல நிதி உதவியை பெறுகிறது. பெரும்பாலான பணம் வங்கியில் சும்மா தான் இருக்கின்றது.
கவாஸ்கர் யோசனை:
இதனால் அந்த பணத்தை பயன்படுத்தி கிரிக்கெட்டுக்கான கட்டமைப்பை பலப்படுத்துவதோடு, வீரர்களுக்கு ஊதியத்தையும் வழங்கலாம். தற்போது பல நிர்வாகிகளும் ரஞ்சிப் போட்டியை விரும்பி பார்க்கிறார்கள். ரஞ்சிப் போட்டியை மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற உணர்வு தற்போது தான் ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் அணி இம்முறை கோப்பையை அடிக்கும்.. பிளேயிங் லெவனை பாருங்க.. ஆகாஷ் சோப்ரா கருத்து
இதையெல்லாம் செய்தால் இந்திய கிரிக்கெட்டில் உள்ள நல்ல வீரர்கள் எல்லாம் வேறு ஒரு துறைக்கு செல்வதை நாம் தடுக்க முடியும். இதன் மூலம் மாநில கிரிக்கெட் அணியின் அவர்கள் தொடர்வது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டுக்கும் நாளுக்கு நாள் வலுப்பெறும். இதன் மூலம் நாம் மேலும் பல கோப்பைகளை ரோகித் சர்மா போல் வெல்லலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.