ராகுல் ஸ்டைலில் நவீன் உல் ஹக் கொண்டாட்டம்.. எதிர்ப்பு தெரிவித்த கவாஸ்கர்..டிவிட்டரில் பொளக்கும் ரசிகர்கள்

0
559

ஐபிஎல் கிரிக்கெட்டில் வர்ணனை செய்யும் கவாஸ்கர் பூமர் ஆங்கிள் போல் செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லக்னோ அணியின் நவீன் உல் ஹக் 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். நவீன் உல் ஹக்கிற்கும் விராட் கோலிக்கும் ஏற்கனவே பிரச்சனை இருப்பதால் அவர் செல்லும் போட்டிகள் எல்லாம் அவரை வெறுப்பேற்றும் வகையில் விராட் கோலி ரசிகர்கள் செயல்படுகின்றனர்.

- Advertisement -

கடைசியாக அவர் விளையாடிய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் கூட ரசிகர்கள் நவீன் உல் ஹக்கை வச்சு செய்தார்கள். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நவீன் உல் ஹக், நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக இந்த ஆட்டத்திலும் கோலி கோலி என்று ரசிகர்கள் கத்தினார்கள்.

அப்போது ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய நவீன் உல் ஹக் தனது காதை கையால் அடைத்துக் கொண்டு கே.எல். ராகுல் ஸ்டைலில் கொண்டாடினார். இதனைப் பார்த்த கவாஸ்கர் பார்வையாளர்களிடம் நவீன் உல் ஹக்கிற்கு பிரச்சனை இருக்கிறது. காதை பொத்திக்கொண்டு கொண்டாடும் முறை தவறு என்றுதான் நான் நினைக்கிறேன்.

நீங்கள் விக்கெட்டை எடுத்து இருக்கிறீர்கள். ரசிகர்களின் கைதட்டல்களை கேட்கும் நேரம் இது. இதேபோன்று பேட்ஸ்மேன்களும் யாரேனும் சதம் அடித்தார்கள் என்றால் காதை பொத்திக்கொண்டு கொண்டாடாதீர்கள். ரசிகர்களின் கைதட்டல்களை கேளுங்கள். வேண்டுமென்றால் காது பின்னாடி கையை வைத்துக்கொண்டு இப்போது கேட்கிறதா என்று கொண்டாடுங்கள்.

- Advertisement -

இப்படித்தான் கொண்டாட வேண்டும் என கவாஸ்கர் கூறியிருந்தார். இதற்கு கடுப்பான ரசிகர்கள் கவாஸ்கர் தேவையில்லாத கருத்துக்களை எல்லாம் கூறி வருவதாக தெரிவித்துள்ளனர். கொண்டாட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் கிரிக்கெட் வர்ணனையை கவாஸ்கர் விட்டுவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்து பேசிய நவீன் உல் ஹக், கேமரூன் கிரீனும், சூரிய குமாரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பார்ட்னர்ஷிப்பை உடைக்க வேண்டும் என அணி நிர்வாகம் என்னை எதிர்பார்த்தது.அதனை செய்தது மகிழ்ச்சி என்று கூறி உள்ளார்.