கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவரைத் தொடர்ந்து நேற்று விராட் கோலி இதே பார்மெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இதை வைத்து பார்க்கும் போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஐகான் வீரர்களாக தற்போது கருத்தப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்ற பின்னர் டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மற்றொரு ஜாம்பவான் வீரரான விராட் கோலி டெஸ்ட் ஃபார்மெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 36 வயதே ஆன விராட் கோலி அவரது பிட்னஸ் வைத்து பார்க்கும் போது இன்னும் இரண்டு ஆண்டுகள் தாராளமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடலாம் என்கிற நிலையில் அவர் ஆச்சரியம் அளிக்கும் விதமாக டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இதை வைத்து பார்க்கும் போது இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
இது குறித்து கவாஸ்கர் விரிவாக கூறும்போது “ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகப்பெரிய சாதனையாளர்களாக இருந்து வருகின்றனர். மீண்டும் தேர்வுக்குழு 2027 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை அணி குறித்து பரிசீலிக்கும். 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் இடம் பெற முடியுமா? அப்படி இடம் பெற்றால் இவர்களால் சிறப்பாக செயல்பட முடியுமா? என்பது குறித்து நிச்சயமாக பரிசீலனை செய்யும். தேர்வுக்குழு ‘ஆம்’ என்று நினைத்தால் இவர்கள் இருவரும் தயாராக இருப்பார்கள்.
ஆனால் நேர்மையாக கூறினால் இவர்கள் இருவரும் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் மிகவும் நேர்மையாக சொல்கிறேன். ஆனால் இது குறித்து யாருக்கு தெரியும் அடுத்த ஒரு வருடத்தில் அல்லது அதற்கு மேல் இவர்கள் இருவரும் சிறப்பான ஃபார்மில் இருந்தால் மேலும் அதற்கு மேல் சதங்கள் அடித்துக் கொண்டே இருந்தால், கடவுளால் கூட இவர்கள் இருவரையும் கைவிட முடியாது” என சுனில் கவாஸ்கர் பேசி இருக்கிறார். அடுத்த உலகக்கோப்பை தொடங்கும் போது ரோஹித் சர்மாவின் வயது 40 மற்றும் விராட் கோலியின் மீது 38 ஆக இருக்கும் என்பதால் இவர்கள் இருவரும் விளையாடுவது சந்தேகம் என கவாஸ்கர் கருதுகிறார்.