துபாயில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற வரும் நிலையில் ஓமன் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வராதது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நேற்று நடைபெற்ற ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மூன்றாவது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழந்த போதும் பேட்டிங் செய்ய வராமல் இருந்த நிலையில் இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், சூரியகுமார் யாதவ் ஒரு புதுவிதமான சிந்தனையாளர் எனவும் அவர் பேட்டிங் செய்ய வராமல் இருந்ததற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “அவர் ஒரு சில ஓவர் பேட்டிங் செய்திருந்தால் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடித்திருக்க முடியும். அது அவருக்கு நன்றாக இருக்கும் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. குறிப்பாக பார்க்கும்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய பேட்டிங் பார்த்தால் அவருக்கு எந்த விதமான பயிற்சியும் தேவையில்லை. ஒரு போட்டியில் இந்திய அணி விரைவாக விக்கெட் இழந்தால் குல்தீப் யாதவ் அடுத்த பேட்டிங் செய்ய வேண்டிய நிலை வரும். இதனால்தான் அவர் இறங்காமல் குல்தீப் யாதவை பேட்டிங் செய்ய அனுப்பியிருக்கலாம்.
இதையும் படிங்க:ஒமான் போட்டி.. கெத்து காட்டிய இந்திய கேப்டன் சூர்ய குமார்.. களத்தில் தரமான சம்பவம்.. கம்பீர் மாஸ்டர் மூவ்
சூரியகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறான சிந்தனையாளர். இலங்கையில் அவர் தானே பந்து வீசினார் ரிங்கு சிங்குக்கு பந்தை வழங்கினார் என்பதை கண்டோம். நழுவி போனதாக நினைத்த ஆட்டத்தை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி அதில் வெற்றியும் கண்டார். அவர் ஒரு புதுவிதமான சிந்தனையாளர் அதனால்தான் அவர் பேட்டிங் செய்யாமல் குல்தீப் மற்றும் அர்ஸ்தீப் சிங்கை அனுப்பினார்” என்று பேசி இருக்கிறார்.






