ரோகித்னால முடியலன்னா.. ஜெய்ஸ்வால் இந்த ட்ரிக் யூஸ் பண்ண முடியும்.. அதனால ஓபனிங் இவங்கதான் பெஸ்ட் – கவாஸ்கர் கருத்து

0
43

பாகிஸ்தானில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்து வருகின்றன.

இன்னும் இந்திய அணி தனது அணியை அறிவிக்காமல் இருக்கும் நிலையில் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மாவோடு களம் இறங்கக்கூடிய தொடக்க வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி 2025

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசைக்க முடியாத தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் மறுமுறையில் தவானுக்குப் பிறகு அவருக்கு சரியான தொடக்கம் இன்னமும் அமைந்த பாடில்லை. கில் அவ்வப்போது சிறந்த தொடக்கத்தை கொடுத்தாலும் முக்கியமான நாக் அவுட் போட்டியில் சொதப்பி விடுகிறார். எனவே அடுத்ததாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி எனும் முக்கிய தொடரில் பங்கு பெற உள்ளது.

மேலும் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தும் இருக்கிறது. மேலும் அந்தத் தொடரில் விளையாடிய சுப்மான் கில்லும் பெரிய பேட்டிங் ஃபார்மில் இல்லை. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ரோகித் சர்மாவோடு களம் இறங்கக் கூடிய தொடக்க வீரர் யார்? என்ற விவாதங்கள் தற்போது உண்டாகி வரும் நிலையில் சுனில் கவாஸ்கர் ஜெய்ஸ்வால் களம் இறங்க வேண்டும் என்று அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரராக இவர் தான் வேண்டும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்திய தேர்வாளராக யார் இதை விரும்புகிறார்கள்? எனக்கு இடது கை பழக்கம் உள்ள ஜெய்ஸ்வால் இடது கை பேட்ஸ்மேன் ஆக இருப்பதால் அவரால் ரோஹித் சர்மாவோடு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இருப்பினும் நீங்கள் அவரை மிகப்பெரிய பிளஸ் அல்லது மைனஸ் ஆக பார்க்கிறீர்களா என்பது உங்கள் பார்வையை பொறுத்தது என்று நான் கூறுவேன். சரியாக சொல்ல வேண்டுமானால் வலது கை பேட்ஸ்மேனுக்கு ஒரு சிறந்த பந்து என்பது இடது கை பேட்ஸ்மேனுக்கு லெக் சைடில் அகலப் பந்தாக மாறுகிறது.

இதையும் படிங்க:கோலிக்கு 7.5.. ஆனா பும்ராவுக்கு மதிப்பெண்ணே இல்லை.. அவர் நெனைச்சா எங்க ஜாம்பவானை கூட வீழ்த்த முடியும் – ஆஸி கில்கிரிஸ்ட் பேட்டி

அதாவது இதன் மூலமாக ஒரு கூடுதல் ரன் கிடைக்கவே வாய்ப்புகள் அதிகம். எனவே இங்கு இடது மற்றும் வலது காம்பினேஷன் நன்றாக செட் ஆகும். மேலும் அதற்குப் பிறகு ரிஷப் பந்த் வருவதால் இது நல்ல வித்தியாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். அதாவது ரோகித் சர்மாவோடு தொடக்க ஆட்டக்காரராக கில்லுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -