கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கோலி உறுதியா இந்த முடிவு எடுக்கணும்.. சச்சினை இதுல முன்மாதிரியா வைத்து ஆடுங்க – சுனில் கவாஸ்கர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 14-ஆம் தேதி பிரிஸ்பேனில் விளையாட இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி விளையாடும் அணுகுமுறை குறித்து சில கருத்துக்களை கூறுகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து தனது மிகச் சிறந்த பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். அந்த போட்டிக்குப் பிறகு அனைவரும் விராட் கோலி திரும்பவும் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று அனைவரும் கருதினார்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக அடுத்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ரன்களில் வெளியேறினார்.

மேலும் ஆப் சைடுக்கு வெளியே வீசப்படும் பந்துகளை விராட் கோலி தொடர்ந்து விளையாட முயற்சித்து ஆட்டம் இழந்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. அதுவே விராட் கோலியின் பலவீனமாக பார்க்கப்படும் நிலையில் 2004ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய விதத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மேற்கோள் காட்டி விராட் கோலி அதே முறையிலான அணுகு முறையை பின்பற்ற வேண்டும் என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் விரிவாக கூறும்போது “உதாரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் என்ன செய்தார் என்பதை பார்க்க வேண்டும். அதற்கு முன்னர் முந்தைய மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வந்து கவர் மற்றும் ஸ்லிப் திசைகளில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிட்னி டெஸ்ட் போட்டியில் ஒரு கவர் டிரைவ் கூட விளையாடவில்லை. அவர் மிட் ஆஃப் மற்றும் மிட் ஆன் திசைகளில் மட்டுமே விளையாடி 241 ரன்கள் குவித்தார். எனவே விராட் கோலி ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளை விளையாடப் போவதில்லை என்று கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : பாபர் ரிஸ்வான் சேர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வளராது.. இத செஞ்சாதான் தப்பிக்க முடியும் – சோகைப் மஹ்சூத் பேட்டி

அப்படி செய்தால் சச்சின் அடித்ததை போல சிறப்பாக விளையாட முடியும். உங்களுக்கு தொடக்கத்தில் சரியாக எதுவும் அமையவில்லை என்றால் மதிய உணவு சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்ய வேண்டும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை அடிக்கப்போய் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா பீல்டர்கள் எந்த திசையில் நிற்கிறார்கள் என்பதை விராட் கோலி கவனித்து அதற்கு தகுந்தவாறு விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts