மீண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் சில விஷயங்கள் கட்டாயம் இருக்கக் கூடாது நாட்டுக்காக மரியாதை செய்யப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தின் காரணமாக பதினெட்டாவது ஐபிஎல் சீசன் 60 போட்டிகள் விளையாடி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கின்றன. இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் முக்கிய வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
ஐபிஎல் நடக்கும் நேரம் சரியா?
உலக கிரிக்கெட் அட்டவணை முன்பு போல் இல்லாமல் தற்பொழுது மிகவும் கடினமானதாக மாறியிருக்கிறது. ஏறக்குறைய பெரிய நிகழ்வு எல்லாமே தொடர்ந்து ஏதாவது ஒரு கிரிக்கெட் தொடரை விளையாடிக் கொண்டே இருக்கின்றன. எனவே உலக கிரிக்கெட் அட்டவணையில் ஓய்வு காலம் என்பதை இல்லாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரை வேறு காலகட்டங்களில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவது கடினம் என்பதால், அந்த அட்டவணையை ஐபிஎல் தொடருக்கு பயன்படுத்த யோசிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் மற்ற வெளிநாட்டு வீரர்கள் கிடைப்பது கடினம் என்பதால் உடனே நடத்தப்படுகிறது. ஆனாலும் ஒருபுறம் இழப்புகள் இருக்கும் பொழுது, இப்படியான கேளிக்கை நிகழ்ச்சியை உடனே நடத்துவது சரியானதாக இல்லை என சிலர் கூறுகிறார்கள்.
கவாஸ்கர் வைத்த கோரிக்கை
இந்த நிலையில் கவாஸ்கர் மீண்டும் ஐபிஎல் தொடர் உடனே தொடங்கப்பட்டாலும் கூட, ஐபிஎல் தொடரில் இரண்டு விஷயங்கள் இடம்பெறக் கூடாது எனவும், தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக, இந்தியா பக்கம் ஏற்பட்டுள்ள இழப்புகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கேப்டன் பதவி.. விராட் கோலி 4வது இடம்.. 2ம் இவர்கிட்ட கொடுங்க.. கில்லுக்கு தகுதி இல்ல – ஸ்ரீகாந்த் பேட்டி
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது ” நான் தற்போது பார்க்க விரும்புவது என்னவென்றால் ஐபிஎல் தொடரில் சியர்ஸ் கேர்ள்ஸ் எனப்படும் நடனமாடும் பெண்கள் இருக்கக் கூடாது. மேலும் போட்டியின் இடையே டிஜேவை வைத்து இசையை ஒலிக்க விடுவதும் இருக்கக் கூடாது. நாம் 60 ஆட்டங்களுக்கு மேலாக இதையெல்லாம் செய்திருக்கிறோம். மீதம் இருக்கும் ஆட்டங்களுக்கு இதை செய்ய வேண்டாம். நம்முடைய மக்களில் சிலர் குடும்பத்தில் சிலரை இழந்து இருக்கிறார்கள். எனவே நாம் இப்படியான விஷயங்களை இந்த நேரத்தில் செய்ய வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்.






