நீங்க நினைச்சு பார்க்காத இந்திய பிளேயிங் XI இருக்கு.. கம்பீர் அதை இறக்கவிட போறாரு – கவாஸ்கர் பேச்சு

0
64
Gavaskar

அடுத்து நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து சுனில் கவாஸ்கர் ஆச்சரியமான தகவலை கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரராக துணை கேப்டன் கில் இடம்பெறுவார். இதன் காரணமாக ஏற்கனவே அந்த இடத்தில் விளையாடி வந்த சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காது என்பது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

இனிமையான தலைவலி

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது “இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரரை நீங்கள் ரிசர்வ் வீரராக விளையாட வைக்காமல் இருக்க முடியாது. ஒரு இடத்திற்கு இரண்டு திறமையான பேட்ஸ்மேன் இருப்பதும், சஞ்சு சாம்சன் மூன்றாவது மற்றும் பினிஷராக விளையாடக் கூடியவராக இருப்பதும் எந்த தேர்வு குழுவுக்கும் இனிமையான தலைவலியானதாகவே இருக்கும்”

“அதே சமயத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி ஜிதேஸ் சர்மா ஆறாவது இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். எனவே இயல்பாக அவர் பேட்டிங் கீழ் வரிசையில் பொருந்திப் போகிறார். இதன் காரணமாக அணி நிர்வாகத்திற்கு இந்த இனிமையான தலைவலி தொடர போகிறது”

- Advertisement -

இதைத்தான் செய்வார்கள்

மேலும் பேசியுள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆனால் முதல் இரண்டு ஆட்டங்களில் ஜிதேஷ் சர்மாவை விட சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த இரண்டு ஆட்டங்களில் சாம்சன் எந்த அளவிற்கு செயல்படுகிறார் என்பதை வைத்து அடுத்த முடிவை எடுப்பார்கள். இதுதான் நடக்கும் என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க : ஆஸிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அடிக்கும் அதிர்ஷ்டம் – வெளியான தகவல்கள்

“அதே சமயத்தில் சஞ்சு சாம்சனை பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களம் இறக்கி, திலக் வர்மாவை ஆறாவது இடத்திற்கு கீழே கொண்டு வருவதற்கு யோசித்து கொண்டு இருப்பார்கள். சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் விளையாடி நல்ல அனுபவம் கொண்டவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -