இந்திய கிரிக்கெட்

சாம்சனை விட பண்ட் சிறந்தவர் அல்ல.. ஆனா ரிஷப் பண்ட் அணியில் எடுக்க இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் பேட்டி

அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாமல் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

அறிவிக்கப்பட்ட இந்திய அணி

பாகிஸ்தானில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள எட்டு கிரிக்கெட் அணிகள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமும் என்று 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படும் இந்த அணிக்கு சுப்மான் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடரில் முகமது ஷமி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக விக்கெட் கீப்பர் வரிசையில் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் இந்தத் தொடரில் சேர்க்கப்படவில்லை. இது பலரிடையே ஆச்சரியத்தையும் மற்றும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சாம்சன் விஜய் ஹசாரே ட்ராபியில் விளையாட மறுத்த காரணத்தால் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சேர்க்கப்படவில்லை என்ற கருத்துக்கள் நிலவிவரும் நிலையில் சுனில் கவாஸ்கர் இது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்சன் தேர்வு செய்யாமல் போனதற்கான காரணம்

இது குறித்து அவர் கூறும் போது “சஞ்சு சாம்சன் மிகக் கடினமான கிரிக்கெட் வீரர். ஏனென்றால் அவர் தற்போது நூற்றுக்கணக்கான ரன்கள் எடுத்து வருகிறார். அவரை எடுக்காததற்கு எந்த ஒரு காரணமாகவும் இருப்பதாக தெரியவில்லை ஆனால் அவர் ரிஷப் பண்ட்டுக்கு எதிராக களம் இறக்கப்பட்டார். அவர் ஒரு ஆட்டத்தையே மாற்றக்கூடியவர் என்று நமக்குத் தெரியும். மேலும் பண்ட் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கலாம்.

இதையும் படிங்க:பும்ரா இல்லாம.. கில் துணை கேப்டனா அறிவிக்க.. காரணமே இதுதான் – அஜித் அகர்கர் பேட்டி

ஆனால் சஞ்சு சம்சனை விட சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. பண்ட் சாம்சனை விட சற்று அதிகமாகவே ஆட்டத்தை மாற்ற முடியும். அதனால்தான் சாம்சன் இந்த வாய்ப்பை தவற விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பண்ட் சாதித்ததற்காக சாம்சன் மீது அனுதாபம் காட்டுவார்கள் என்பதால் சாம்சன் இதில் சோர்வடைய கூடாது” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts