100 ரன் அடிச்சது அவங்களுக்கு பிடிக்கல.. அதான் அப்ரிடி விராட் கோலிக்கு இந்த வேலையை செஞ்சார் – சுனில் கவாஸ்கர்

0
898

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அபாரமான சத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் போட்டியின் போது ஏற்பட்ட சிறு நிகழ்வு குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி அபார சதம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களம் இறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அபாரமான சதத்தின் உதவியோடு வெற்றி இலக்கை அடைந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் போட்டியின் போது விராட் கோலி தனது 51 வது ஒரு நாள் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது 42வது ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி வேண்டுமென்று அந்த ஓவரில் விராட் கோலிக்கு மூன்று அகல பந்துகளை வீசினார்.

இருப்பினும் விராட் கோலி 96 ரன்கள் விளையாடிக் கொண்டிருந்த போது குஷ்தில் சா ஓவரில் பவுண்டரி அடித்து தனது சதத்தை பதிவு செய்தார். இந்த சூழ்நிலையில் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் அணி விராட் கோலி 90 ரன்களில் விளையாடி இருந்தால் அதனை ஏற்றுக் கொண்டிருக்கும். மேலும் தங்கள் அணி தோல்வியடையும் நேரத்தில் எதிரணி வீரர் சாதனை படைக்கும் போது அதனை எந்த அணியும் ஏற்றுக் கொள்வதில்லை என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி விரும்பவில்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கோலி 100 ரன்களை எட்டாமல் இருக்க, பாகிஸ்தான் அணி கொஞ்சம் அகலமாக பந்து வீச முயற்சித்ததாக நினைக்கிறேன். விராட் கோலி 90 ரன்கள் எடுத்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால் விராட் கோலி 100 ரன்கள் எடுத்தது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது அவர்கள் அதை விரும்பவில்லை.

இதையும் படிங்க:சிஎஸ்கே வீரர் சாதனை சதம்.. பிரேஸ்வெல் அசத்தல் பவுலிங்.. 5 விக்கெட்டில் நியூஸி அணி பங்களாதேஷை வீழ்த்தியது.. சாம்பியன்ஸ் டிராபி

எந்த அணியும் குறிப்பாக தாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று நினைக்கும் போது தங்களுக்கு எதிராக ஒரு சாதனை அல்லது 5 விக்கெட்டுகள் போன்ற சாதனைகள் படைக்கப்படுவதை விரும்பாது. அவை அனைத்துமே உங்கள் பெயருக்கு எதிராக நீங்கள் விரும்பாத சாதனைகள் ஆகும்” என்று சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார். நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -