சிஎஸ்கே வீரர் சாதனை சதம்.. பிரேஸ்வெல் அசத்தல் பவுலிங்.. 5 விக்கெட்டில் நியூஸி அணி பங்களாதேஷை வீழ்த்தியது.. சாம்பியன்ஸ் டிராபி

0
160

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இதில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை தோற்கடித்துள்ளது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

பாகிஸ்தானில் தற்போது சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஆறாவது லீக் ஆட்டம் ராவல் பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்ய அழைத்தது. பங்களாதேஷ் அணி 8.2வது ஓவரின் போது தனது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹாசன் 24 ரன்னில் வெளியேற, மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் மெகிதி ஹாசன் 13 ரன்னில் நடையை கட்டினார். கடந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி சதம் அடித்த டவ்ஹித் ஹ்ரிதாய் இந்த முறை 7 ரன் எடுத்து வெளியேறினார்.

அதற்குப் பின்னர் மிடில் வரிசை ஆட்டக்காரர் ஜேக்கர் அலி சிறப்பாக விளையாடி 45 ரன்கள் குவிக்க, தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் சான்டோ 77 ரன்கள் குவித்தார். வங்கதேச அணி இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. பந்துவீச்சை பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிராஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கியது.

- Advertisement -

ரச்சின் ரவீந்திரா அபாரம்

நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் டக் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரன் காண்வே 30 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு மூன்றாவது வரிசையில் களமிறங்கிய கேன் வில்லியம்சன் 5 ரன் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேற, சிஎஸ்கே வீரரும் நியூசிலாந்து அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன ரச்சின் ரவிந்த்ரா ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

இதையும் படிங்க:நான் சொன்னது பொய் ஆகல.. விராட் கோலி திரும்ப ஒரு தடவை அதை நிரூபித்து இருக்கிறார் – சிறுவயது கோச் பேட்டி

இதற்கு முந்தைய முத்தரப்பு தொடரில் காயம் ஆகி வெளியேறிய நிலையில் இந்த ஆட்டத்தின் மூலமாக மீண்டும் களம் இறங்கி 15 பந்துகளை எதிர் கொண்டு 12 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 112 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக சதம் அடித்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சதம் அடித்திருக்கிறார். அவருக்கு பக்கபலமாக விக்கெட் கீப்பர் டாம் லதாம் 55 ரன்கள் குவித்து கம்பெனி கொடுக்க இறுதியாக நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 46.1 ஓவர்கள் முடிவில் 237 ரன்கள் குறித்து வெற்றி பெற்றது.

- Advertisement -