நான் இந்தியன் என்பதால் அழைக்கவில்லை.. ஆனால் நியாயமாக இதுதான் நடந்திருக்க வேண்டும் – கவாஸ்கர் வருத்தம்

0
197
Gavaskar

நடப்பு பார்டர் கவாஸ்கர் பரிசளிப்பு விழாவில் தான் இந்தியர் என்கின்ற காரணத்திற்காக அழைக்கப்படவில்லை என்றும் ஆனால் தான் மேடையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் சுனில் கவாஸ்கர் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா லெஜன்ட் வீரர் ஆலன் பார்டர் மற்றும் இந்திய லெஜன்ட் வீரர் சுனில் கவாஸ்கர் இருவரது பெயர்களில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுனில் கவாஸ்கரை மேடைக்கு அழைக்காதது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

பரிசளிப்பு முறையில் இருக்கும் நடைமுறை

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்கிறதோ, அந்த அணியின் லெஜெண்ட் வீரர் பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்படுகிறார். இந்திய அணி வென்றிருந்தால் கவாஸ்கர் அழைக்கப்பட்டு இருப்பார். ஆஸ்திரேலியா வென்றதால் ஆலன் பார்டர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் சுனில் கவாஸ்கர் இந்த நடைமுறையில் விருப்பமில்லை. இருவரின் பெயரில் நடத்தப்படும் டிராபிக்கு பரிசளிக்கும் பொழுது இருவருமே இருப்பது சிறந்த முறையில் இருக்கும் என்று அவர் நினைக்கிறார். இதனால் இனிமேல் இந்த தொடரின் பரிசளிப்பு நிகழ்வில் இருவருமே இருக்கும்படி அமைவது அருமையானதாக இருக்கும் என்று கூறுகிறார்.

- Advertisement -

இந்தியர் என்பதால் அழைக்கவில்லை

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” நிச்சயமாக நான் பிரசன்டேஷன் விழாவில் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஏனென்றால் இது பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடப்பது. இங்கு ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது அதனால் வென்றது. நான் இந்தியர் என்பதால் அழைக்கப்படவில்லை. ஆனால் என் நண்பர் ஆலன் பார்டர் உடன் மேடையில் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்”

இதையும் படிங்க : இனி எல்லோரும் இதை செய்யணும்.. அணியின் நல்லதுக்காக ஐந்து மாதத்தில் அந்த மாற்றம் உறுதி – கம்பீர் பேச்சு

“இன்றைய போட்டியின் முடிவுக்கு முன்பாக என்னிடம், இந்தியா இந்த போட்டியில் வெல்லவில்லை என்றாலோ டிரா செய்யவில்லை என்றாலோ நான் பரிசளிப்புக்கு மேடைக்கு அழைக்கப்பட மாட்டேன் என்று கூறினார்கள். இதற்காக பெரிய அளவில் வருத்தப்படவில்லை. ஆனால் பார்டர் கவாஸ்கர் பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் நாங்கள் இருவருமே பரிசளிப்பு மேடையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -