இனி எல்லோரும் இதை செய்யணும்.. அணியின் நல்லதுக்காக ஐந்து மாதத்தில் அந்த மாற்றம் உறுதி – கம்பீர் பேச்சு

0
990
Gambhir

இந்திய டெஸ்ட் அணியில் அடுத்து என்ன மாற்றங்கள் நடக்கும்? இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என தோற்று இருக்கிறது. இதில் ஒட்டுமொத்தமாக பும்ரா, ஜெய்ஸ்வால் தவிர மற்ற வீரர்கள் யாருமே பெரிய பங்களிப்பை கொடுக்கவில்லை. மேலும் இந்திய அணியின் அணுகுமுறை மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

யார் ஓய்வு பெறும் இடத்தில் இருக்கிறார்கள்?

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் பாதியில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்று வெளியேறி வந்தார். தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

மேலும் இது ரவீந்திர ஜடேஜா வரை நீளலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்து இந்திய அணிக்கு ஐபிஎல் தொடர் முடிந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற, இந்திய அணிக்கு இது மிகவும் முக்கியமானதாக அமையும்.

- Advertisement -

மாற்றங்கள் உறுதியாக நடக்கும்

இது குறித்து பயிற்சியாளர் கம்பீர் பேசும் பொழுது “எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புவேன். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது ஒரே ஒரு போட்டியை மட்டும் விளையாடுவது கிடையாது. உங்களுக்கு உங்களுக்கு அர்ப்பணிப்பு இருந்தால் நீங்கள் அதிகம் விளையாட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உங்களால் சிறந்த முடிவுகளை கொண்டு வர முடியாது”

இதையும் படிங்க : உண்மை இதான்.. பும்ரா பவுலிங் பண்ண வராததற்கு.. நாங்க 15 பேர் ரொம்ப சந்தோசப்பட்டோம் – ஹெட் பேட்டி

“இந்திய டெஸ்ட் அணியில் வீரர்கள் ஓய்வு குறித்து பேசுவதற்கு இது சரியான நேரம் கிடையாது. இப்பொழுது இந்த தொடர் முடிந்து விட்டது. இதுகுறித்து பேசுவதற்கு அடுத்த தொடர் ஆரம்பிப்பதற்கு நடுவில் 5 மாதங்கள் இருக்கிறது. எனவே அப்போது அணியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஆனால் அது அணிக்காகவே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -