தப்பித்ததா இந்திய அணி.? டிராவிஸ் ஹெட் காயம்.. அடுத்த போட்டியில் ஆடுவாரா.. அவரே கூறும் விளக்கம்

0
1100

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் தேதி மென்போர்ன் நகரில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டிராவிஸ் ஹெட் காயமடைந்திருப்பதாக தகவல் வெளிவரும் நிலையில் அது குறித்த விளக்கம் அவரே அளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக டிராவிஸ் ஹெட் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

இரண்டு அணிகளிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமமாக இருக்கும் நிலையில் டிராவிஸ் ஹெட் தனித்து நின்று இந்திய அணிக்கு பலமான எதிராளியாக விளங்குகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அணியை வலுவாக மீட்டதோடு மூன்றாவது போட்டியிலும் அபாரமாக விளையாடி சதம் அடித்திருக்கிறார். இதுவரை டிராவீஸ் ஹெட் இந்த தொடரில் 409 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது களமிறங்கிய டிராவிஸ் ஹெட் ஆடுகளத்தில் சில அசவுகரியத்தை உணர்ந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தபோது இயல்பாக இல்லாமல் நொண்டி நடப்பது போல காணப்பட்டார். மேலும் அவரது இடுப்பு பகுதியில் சிறிய காயம் இருந்திருக்கும் நிலையில் ஹெட் அடுத்த போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவியது.

இதையும் படிங்க:நியூசிலாந்து டி20.. இலங்கை அணி அறிவிப்பு.. இந்திய வீரர்களை கலங்க வைத்த முக்கிய பவுலர் நீக்கம்

இந்த சூழ்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஹெட் “அது ஒரு சிறிய காயம் தான் இரண்டு வாரங்கள் ஆகியிருக்கிறது. கொஞ்சம் வலிக்கிறது ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தத் தொடரில் நான் விளையாடும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விளையாட நினைக்கும் விதம் இதுதான் எனவே அதைச் செய்வதில் மகிழ்ச்சி. அணியில் சூழ்நிலையை உணர்ந்து நான் விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலமாக ஹெட் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -