இப்ப நீ முட்டாள் கிடையாதுபா.. நேத்து ரிஷப் பண்ட் கொண்டு வந்த பிளான் வேற லெவல் – கவாஸ்கர் பாராட்டு

0
605
Rishabh

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மிகுந்த புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் எனக் குறிப்பிட்டு சுனில் கவாஸ்கர் பாராட்டி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் ரிஷப் பண்ட் மோசமான ஷார்ட் விளையாடி ஆட்டம் இழந்ததுடன் டிரா ஆக வேண்டிய போட்டியை தோற்க வைத்தார் என சுனில் கவாஸ்கர் அவரை கிரிக்கெட் வர்ணனையில் முட்டாள் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் இப்படித்தான் போல

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது “ரிஷப் பண்ட் எப்பொழுதும் இப்படித்தான் போல. அவர் உள்ளே வந்ததும் முதல் இரண்டு மூன்று பந்துகளில் கால்களை நகர்த்தி பவுண்டரிகள் அடிக்கிறார். அது அவரை சுதந்திரமாக உணர வைக்கிறது. பின்னர் அவர் அவருடைய வழியில் விளையாட ஆரம்பிக்கிறார்”

“இங்கே அவர் தனது அணுகு முறையால்தான் அளவிடப்படுகிறார். எடுத்ததும் அதிரடியை காட்டி விட்டு பிறகு நடுவில் அவர் மிகவும் பொறுமையாக விளையாட ஆரம்பித்து விடுகிறார். மீண்டும் பந்துவீச்சாளர்கள் சோர்வடைய ஆரம்பித்ததும், அவர் உடனடியாக தாக்கி விளையாட தொடங்கி விடுகிறார். பெரிய சிக்ஸர்கள் பெரிய ஷாட்டுகள் ஆடுகிறார்”

- Advertisement -

நிறைய டைமிங் இருக்கிறது

“ரிஷப் பண்ட் விளையாடும் பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருக்கு நிறைய டைம் இருக்கிறது. அவர் அதன் மூலம் நான் உங்களை எளிதாக விளையாடுவதற்கான டைமை வைத்திருக்கிறேன், பெரிய ஷாட் ஆட வேண்டிய தேவையே இல்லை, வெகு எளிதாக பேட்டின் நடுவில் உங்களது பந்துகளை தடுத்து விளையாடுகிறேன் என்று காட்டுகிறார். இந்த மகத்தான திறமை இவரிடம் இருக்கிறது”

இதையும் படிங்க : 25.2 ஓவர்.. 123 ரன்.. ஸ்டோக்ஸ் செய்த மெகா தவறு.. இந்தியாவுக்கு 2 சதங்கள்.. கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம்

“தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர் சதம் அடித்ததை நான் பார்த்திருக்கிறேன். நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது. அவர் தாக்குதல் மற்றும் தற்காப்பு இரண்டின் சிறந்த கலவையைக் கொண்டிருக்கிறார். அவர் திடமான தற்காப்புடன் ஆரம்பித்து பின்பு தாக்குதலுக்கு செல்கிறார்” என்று பாராட்டி இருக்கிறான்.

- Advertisement -