இந்திய கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி அசத்தல்
சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசியில் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெறாத வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களம் கண்டார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 249 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தாலும், தனது சிறப்பான சுற்பந்துவீச்சின் காரணமாக நியூசிலாந்து அணியை விரைவாக வீழ்த்தியது.
இதில் சுழற் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்த வருண் சக்கரவர்த்தி தனது முதல் போட்டியிலேயே 5 விக்கட்டுகள் கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் அவரது இந்த மாயாஜால செயல்பாட்டிற்கு காரணம், அவர் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை எனவும் பேட்ஸ்மேன்கள் அவரது கைகளில் இருந்து பந்து வெளியேறும் போது கணிக்க தவறுகிறார்கள் எனவும் ஹர்பஜன் சிங் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
பேட்ஸ்மேன் செய்யும் தவறு
இதுகுறித்து ஹர்பஜன் சிங் விரிவாக கூறும்போது ” பாருங்கள், அவர் அதிகமாக கிரிக்கெட் விளையாட வில்லை என்பது தான் இதன் மாயாஜால பகுதி. இதுதான் முதல் விஷயம். மேலும் பேட்ஸ்மேன்களுக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது, அவரது கை மிக வேகமாக செயல்படுவதால் அவர் எந்த வகையான பந்து வீசுகிறார் என்பதை அறிய மக்கள் அவரது கைகளை பார்ப்பதில்லை. பந்தை வீசிய பிறகு பேட்ஸ்மேன்கள் அதை கணிக்க முயற்சித்து தவறு செய்கிறார்கள். ஒரு பேட்ஸ்மேன் இதை எதிர்கொண்டு விளையாட அவர் எந்த மாதிரியான பந்தை வீசுகிறார் என்பதை அவர் கைகளில் இருந்தே கணிக்க வேண்டும்.
இதையும் படிங்க:துபாய் எங்க சொந்த நாடு கிடையாது.. ஆஸிக்கு எதிரா இந்த செட்டப்ல வர ஆவலா இருக்கு – ரோகித் சர்மா பேட்டி
அதனால் தான் நியூசிலாந்து வீரர்கள் அவரது கைகளை பார்க்காமல் நீளத்தில் இருந்து கணித்து விளையாட முயற்சித்து தவறு செய்தார்கள். வருண் ஒரு தன்னம்பிக்கை கொண்ட பந்துவீச்சாளர், இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது தெரியும். மேலும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து அவர் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் விளையாடுவார்” என்று நம்புவதாக கூறியிருக்கிறார்.






