கவாஸ்கர் இந்திய அணிக்கு வேற லெவல் ஐடியா.. ரோகித் டிராவிட் இதை கவனிப்பார்களா?

0
300
Gavaskar

நடப்பு டி20 உலக கோப்பையில் நாளை இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாட இருக்கும் நிலையில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார்? என்பதில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. தற்பொழுது இதற்கு சுனில் கவாஸ்கர் அருமையான தீர்வு ஒன்றைக் கூறியிருக்கிறார்.

பந்துவீச்சாளர்களின் லைன் மற்றும் லென்த்தை மாற்றுவதற்கு, இடது கை சுழல் பந்துவீச்சாளர்களை பவர் பிளேவில் வரவிடாமல் செய்வதற்கு, துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் இடதுகை பேட்ஸ்மேன் ஆக இருக்க வேண்டிய அவசியம் மிக அதிகமாக இருக்கிறது. இல்லையென்றால் பந்துவீச்சாளர்கள் சீக்கிரத்தில் செட்டில் ஆகி விடுவார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்று சிலர் பேசி வருகிறார்கள். அதே சமயத்தில் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி துவக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் வரவேண்டும் என பலர் கூறி வருகிறார்கள்.

அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற்று விளையாடுவார் என்றால் சிவம் துபே அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாறுகிறது. தற்பொழுது இதற்கு சுனில் கவாஸ்கர் அருமையான தீர்வு ஒன்றை உருவாக்கி தன்னுடைய பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய பிளேயிங் லெவனில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிதான் இருக்கிறார்கள். ஆனால் மூன்றாவது இடத்தில் ஜெய்ஸ்வால் இருக்கிறார். இதன் காரணமாக மேல் வரிசையில் ஒருவர் தாக்கி விளையாடி ஆட்டம் இழந்தாலும் அடுத்து வந்து ஜெய்ஸ்வால் தொடர முடியும். இதேபோல இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்து, ஹர்திக் பாண்டியாவை ஐந்தாவது பந்துவீச்சாளராகவும், சிவம் துபேவை ஆறாவது பந்துவீச்சாளராகவும் அணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இது சிறந்த அணியாகத் தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு இந்த சிஎஸ்கே ஆல் ரவுண்டர் வேண்டாம்.. ஒதுக்குன இவருக்கு வாய்ப்பு கொடுங்க – ஸ்ரீசாந்த் கருத்து

சுனில் கவாஸ்கரின் டி20 உலகக்கோப்பை இந்திய பிளேயிங் லெவன் :

ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (வி. கீ ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.