ஆஸி ஓவரா பேசுறதுக்கு.. இங்க ஏன் யாரும் பதில் சொல்லல.. அஸ்வின் அதை ஆரம்பிங்க – கவாஸ்கர் பேச்சு

0
141
Gavaskar

இந்திய அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து நிறைய பேச்சுகள் வெளிவர ஆரம்பித்துவிட்டது. இதற்கு சரியான பதிலடி தர வேண்டும் என இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா தரப்பில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கிளன் மெக்ராத், ஆடம் கில்கிறிஸ்ட், ஜெஃப் லாவ்சன் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ஜான் புக்கனன் என தினம் ஒருவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என பேட்டி கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரிக்கி பாண்டிங் பற்ற வைத்த நெருப்பு

இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முதல் முறையாக ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணிப்பு கூறியிருந்தார். அதில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் தொடர் சமனில் முடியாது எனவும், மூன்றுக்கு ஒன்று என ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் என்று கூறியிருந்தார்.

இதற்கு அடுத்து உச்சகட்டமாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜெப் லாவ்சன் விராட் கோலி காட்டுவது போலி தைரியம் என விமர்சனம் செய்து, ஆஸ்திரேலியா அணியே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று கூறியிருந்தார். இதற்கு இந்திய தரப்பிலிருந்து ரவி சாஸ்திரி மட்டுமே ஹாட்ரிக் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்கு உறுதியென பதிலடி கொடுத்திருந்தார்.

- Advertisement -

அஸ்வினை வைத்து பதிலடி கொடுங்க!

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்தியா ஆஸ்திரேலியா விற்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு முன்பாக உள்நாட்டில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது. இது ஒரு கடினமான டெஸ்ட் தொடருக்கு முன்பாக நல்ல மனநிலையை இந்திய அணிக்கு உருவாக்கும்.

இந்திய அணிக்கு எதிராக தொடரை மொத்தமாக வெல்வோம் என மெக்ராத் போல ஆஸ்திரேலிய தரப்பிலிருந்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படாவிட்டாலும் கூட, ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும் என தொடர்ந்து கூறி வருகிறார்கள். துரதிஷ்டவசமாக இதற்கு இந்திய தரப்பிலிருந்து ரவி சாஸ்திரி தவிர வேறு யாரும் பதில் சொல்லவில்லை.

இதையும் படிங்க : சச்சின் சாதனை முக்கியம் இல்லை.. எனக்கு இதுதான் முக்கியம்.. அதுக்காகவே விளையாடுறன் – ஜோ ரூட் பதில்

ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்மித்துக்கு ஒரு ஸ்பெஷல் பந்தை உருவாக்கி வருவதாக கூற வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் ஸ்மித்தை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக அனுப்புவார்கள். அவர் பும்ராவிடமிருந்து தப்பிக்க போராட வேண்டிய அவசியம் உருவாகும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -