சச்சின் சாதனை முக்கியம் இல்லை.. எனக்கு இதுதான் முக்கியம்.. அதுக்காகவே விளையாடுறன் – ஜோ ரூட் பதில்

0
115
Root

இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கும் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இருக்கிறார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது மிகவும் முக்கியமான பதில் ஒன்றைக் கூறி இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் மற்றும் 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்திருக்கிறார். தற்பொழுது ஜோ ரூட் 34 சர்வதேச டெஸ்ட் சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் அடித்த சாதனையை முறியடிப்பதற்கு ஜோ ரூட்டுக்கு 3544 ரன்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த சாதனைகளை முறியடிக்க அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்க செய்கிறது.

- Advertisement -

2019-ல் ஆரம்பித்த பயணம்

ஜோ ரூட் 2019 ஆம் ஆண்டு காலத்தில் 17 சர்வதேச டெஸ்ட் சதங்கள் நடித்திருந்தார். தற்பொழுது அங்கிருந்து 2024 ஆம் ஆண்டு மத்தியில் 34 சர்வதேச டெஸ்ட் சதங்கள் அடித்தவராக இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டுமே மொத்தம் 17 சர்வதேச டெஸ்ட் சேதங்கள் அடித்து யாரையும் விட முன்னணியில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் விராட் கோலியை விட சதங்களில் பின்தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் காலம் ஆரம்பித்ததும் எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் சரிவு உண்டானது. ஆனால் ஜோ ரூட்டுக்கு மட்டுமே அந்த காலகட்டத்திற்குப் பிறகு மிகப்பெரிய பேட்டிங் ஃபார்ம் வந்தது. அங்கிருந்து நம்ப முடியாத அளவுக்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் டன் கணக்கில் தொடர்ந்து ரன்கள் குவித்து வருகிறார்.

- Advertisement -

சச்சின் சாதனை மீது கண் இருக்கிறதா?

இந்த நிலையில் நேற்று அவரிடம் சச்சின் சாதனை மீது கண் இருக்கிறதா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய ஜோ ரூட் ” நான் விளையாடி என்னால் முடிந்ததை அணிக்காக செய்ய விரும்புகிறேன். என்னால் முடிந்த வரையில் ரன்கள் அடிக்க விரும்புகிறேன். எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை மட்டுமே பார்க்க விரும்புகிறேன்.

தற்போது குக் சாதனையை முறியடித்திருப்பதில் சிறந்த உணர்வு எதுவும் கிடையாது. சதம் அடிப்பது ஆச்சரியமான உணர்வை தருகிறது. ஒட்டுமொத்தமாக எதுவுமே இல்லை என சொல்ல முடியாது அப்படி சொன்னால் அது பொய்யாக அமையும். ஆனால் அணி வெற்றி பெறுவதை விட சிறந்த உணர்வு எதுவும் கிடையாது. இதுதான்எனக்கு முக்கியமானதாக இருக்கிறது.

இதையும் படிங்க : கேரண்டி இல்ல.. சூரியகுமார் கேட்ச் சிக்ஸ் போயிருந்தாலும்.. இதுதான் நடந்திருக்கும் – ஜான்டி ரோட்ஸ் பேச்சு

எனவே உணர்வு விளையாட்டில் எந்த அளவிற்கு தாக்கம் செலுத்துகிறதோ, அந்த அளவிற்கு நீங்கள் அதிகமாக அணிக்கு தேவையானதை எல்லாம் செய்ய முடியும். இதுவே முக்கிய மையமாக இருக்கும். இதுபோன்ற அணி வெற்றி பெறும் பல நாட்கள் இதே மனநிலையுடன் வரும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -