இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
நேற்று அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் துணை கேப்டனாக மீண்டும் சுப்மன் கில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று இந்திய அணி அறிவிப்பின் போது இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் பிஸியாக இருந்த காரணத்தினால் மட்டுமே அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்ததாக வெளிப்படையாகவே பேசி விளக்கம் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக விளையாட முடியாது. தற்போது உள்ளே வந்திருக்கும் கில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக விளையாடுவார். எனவே சஞ்சு சம்சனுக்கு மூன்று அல்லது, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
இதுகுறித்து கவாஸ்கர் பேசும்பொழுது “சாம்சன் இப்பொழுதும் பிளேயிங் லெவனில் ஒருவராக இருக்க முடியும். அவர் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் விக்கெட் கீப்பர் மிகவும் திறமையான வீரர். அவரால் எந்த இடத்திற்கு பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டாலும் மாறிக்கொள்ள முடியும். அவருக்கு இது பழக்கமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எனவே நாம் அவர் பற்றி கவலைப்பட கூடாது”
இதையும் படிங்க : அவர் என்ன தப்பு செஞ்சாரு.. இது நியாயமே இல்லை.. கம்பீர் சரியான விளக்கம் தருணம் – இந்திய முன்னாள் வீரர் வருத்தம்
“இப்போது மிகவும் நிச்சயமான ஒரு விஷயமாக கில் மற்றும் அபிஷேக் சர்மா என இரண்டு பஞ்சாப் வீரர்கள் துவக்க ஆட்டக்காரர்களாக போட்டியை துவங்குவார்கள். இதைத் தொடர்ந்து மூன்று மற்றும் நான்காவது இடத்தில் திலக் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் வருவார்கள். ஏனென்றால் இந்திய அணி நிர்வாகம் ரைட் லெப்ட் பேட்டிங் காம்பினேஷனை விட்டுக் கொடுக்காது” என்று கூறியிருக்கிறார்.