இந்திய கிரிக்கெட்

வெ.இ தொடரில் ஜெய்ஸ்வால் மேல்தான் என் கண் இருக்கும்.. கம்பீர் இதை செய்தே ஆகணும் – இர்பான் பதான் பேச்சு

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் பேட்டர் ஜெயஸ்வாலுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் பேக்கப் ஓப்பனராக தயாராக வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இந்திய அணியில் உள்ள முதன்மை பிளேயர்களான பும்ரா ஓய்விலும், ஸ்ரேயஸ், அக்சர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆசிய போட்டிகளிலும் விளையாடி வருவதால், இந்த தொடர் இந்திய அணியின் பெஞ்ச் ஸ்ட்ரென்த்தை சோதித்துப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

​வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு சில போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், இளம் பிளேயர்களுக்கு வாய்ப்பளித்து சோதித்துப் பார்ப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​இதுகுறித்து இர்பான் பதான் பேசும்போது, “வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஜெயஸ்வாலுக்கு எத்தனை வாய்ப்புகள் கிடைக்கிறது என்பதை நான் உற்று நோக்குவேன். அவர் ஸ்குவாடில் பேக்கப் ஓப்பனராக இருக்கிறார், தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு செல்லும் முன் பேக்கப் ஓப்பனருக்கு போதிய வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும். அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் ரெகுலராக ஆட வேண்டும். பேட்டிங் ஆர்டரை மாற்றியோ அல்லது பிளேயர்களை ரொட்டேட் செய்தோ வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசுகையில், “நமன் தீர் ஒரு சிறந்த டேலன்ட், டொமஸ்டிக் கிரிக்கெட் பெர்ஃபார்மன்ஸை விட அவரது பௌலிங் திறமைக்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கீழ் வரிசையிலும் டாப் ஆர்டரிலும் பேட்டிங் செய்து, ஆஃப்-ஸ்பின் வீசக்கூடிய ஒரு பிளேயர் ஒருநாள் செட்டப்பில் தேவையாக இருந்தார். வாஷிங்டன் சுந்தர் ஆசிய போட்டிகளிலும், ரியான் பராக் காயத்திலும் இருப்பதால் நமன் தீருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது பௌலிங் சோதிக்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts