இந்திய கிரிக்கெட்

உலக கிரிக்கெட்ல இது நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை.. நான் இந்த புதிய சவாலை ஏற்றுக் கொள்கிறேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு

​ஜப்பான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 போட்டிக்கு முன்பாக, ஜப்பானில் கிரிக்கெட் விளையாடுவேன் என்று தான் நினைத்துப் பார்த்ததே இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

- Advertisement -

​இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, ஜப்பான் நாட்டின் சானோ நகரில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.

​இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக இந்த சர்வதேச டி20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

​இதுகுறித்து ஸ்ரேயஸ் ஐயர் பேசும்போது, “நான் இதை நினைத்துப் பார்த்ததே இல்லை, ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று விளையாடுவதை விட இது முற்றிலும் வித்தியாசமான ஒரு அனுபவம். இங்குள்ள மக்களின் கலாச்சாரமும், ஒழுக்கமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் புதிய கலாச்சாரங்களை விரும்பக் கூடியவன், அதனால் இந்த புதிய சவாலை எதிர்கொள்ள ஆவலாக உள்ளேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர், “ஐபிஎல் தொடர் இளம் பிளேயர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க ஒரு சிறந்த பிளாட்ஃபார்ம் ஆக இருக்கிறது. சமீபத்தில் எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் மூலம் உயர்ந்து வந்தவர் தான். ஐபிஎல் தொடரில் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்தும்போது, அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும், மேலும் இந்திய அணியில் இடம் பிடிப்பதும் எளிதாகும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by