10 ஓவர் 45 ரன்.. ரோகித் இனியும் ஏமாற்ற வேண்டாம்.. ஒழுங்கா இதை செய்யுங்க – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

0
353
Rohit

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் அணுகுமுறை குறித்து இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் அவர் தனது பேட்டிங் அணுகுமுறையை எவ்வாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்து அறிவுரையும் கூறி இருக்கிறார்.

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதற்கடுத்து சாம்பியன் டிராபியில் தொடர்ந்து மூன்று போட்டிகளாக ஏமாற்றம் கொடுத்து வருகிறார். நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்கு டாப் ஆர்டரில் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

வெற்றி தரும் ரோகித் சர்மா அணுகுமுறை

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா பவர் பிளேவில் அதிரடியாக விளையாடிய ரன்கள் கொண்டுவரும் அணுகுமுறையை பின்பற்ற ஆரம்பித்தார். இதனால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டது. அவர் கொடுக்கும் அதிரடி தொடக்கம் அடுத்து வரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை குறைத்தது.

எனவே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து இத்தகைய அதிரடி அணுகுமுறையை பவர் பிளேவில் பின்பற்றுகிறார். இதன் காரணமாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்திருக்கிறது ஆனால் ஆவரேஜ் குறைந்திருக்கிறது. அதாவது அவர் மிக வேகமாக 40 ரன்கள் எடுக்கிறார். ஆனால் அவரிடமிருந்து சதங்கள் வருவதில்லை. இதனால் டாப் ஆர்டரில் இருந்து நீண்ட துவக்கமும் பெரிய ஸ்கோரும் கிடைப்பதில்லை.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ந்து சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கும் காரணத்தினால் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறை குறித்து யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் எப்போதும் விமர்சனப் பார்வையுடன் இருக்கும் சுனில் கவாஸ்கர் இதை விடவில்லை. தற்பொழுது அவர் இது குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : என்னை பற்றி ரோகித் சொன்ன அது உண்மை இல்லை.. என் பந்துவீச்சு இப்படித்தான் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ரோகித் சர்மா தனது இயல்பான விளையாட்டை விளையாட வேண்டும். மேலும் அவர் தொடக்க வீரர் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஒரு தொடக்கப் பேட்ஸ்மேன் 10 ஓவர்கள்தான் விளையாட வேண்டும், அதில் 40 முதல் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அவர் 10 ஓவர்கள் தாண்டி விளையாட வேண்டும். அப்பொழுதுதான் அவரிடமிருந்து அணிக்குப் பெரிய ரன்கள் கிடைக்கும். எனவே ரோகித் சர்மா இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -