இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வருண் சக்கரவர்த்தி வலைப்பயிற்சியில் எவ்வாறு செயல்படுகிறார் என்பது பற்றி கூறியது உண்மை கிடையாது என தற்போது வருண் சக்கரவர்த்தியே தெரிவித்திருக்கிறார்.
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை பெற்ற வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். மேலும் துபாய் ஆடுகள தன்மைக்கு வருண் சக்கரவர்த்தியை சேர்த்தது எதிரணிகளுக்கு பெரிய அச்சத்தை தற்பொழுது ஏற்படுத்தும் அளவுக்கு மாறி இருக்கிறது.
வருண் பற்றி ரோகித் கூறியது
வரும் சக்கரவர்த்தி 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீச முடியாமல் தடுமாற இந்திய அணி அந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றில் வெளியே வந்தது. இதற்குப் பிறகு அவருக்கு நான்கு ஆண்டுகள் இந்திய அணியின் கதவுகள் திறக்கவில்லை. தற்போது அதே மைதானத்தில் 5 விக்கெட் கைப்பற்றி மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா வருண் சக்கரவர்த்தி வலைப்பயிற்சியில் கூட ஒரே ஒரு முறையில் மட்டுமே பந்து வீசுவதாகவும், தங்களிடம் கூட அவரது வேரியேஷன்களை அவர் வெளிப்படுத்திக் கொள்வதில்லை என்றும், அந்த அளவிற்கு முன் எச்சரிக்கையோடு செயல்படுகிறார் என்றும் பாராட்டி கூறியிருந்தார்.
ரோகித் கூறியது உண்மையில்லை
தற்போது இது குறித்து வருண் சக்கரவர்த்தியிடம் கேட்ட பொழுது தான் ஏன் வலைப் பயிற்சியில் அதிக வேரியேஷன்களை வீசுவதில்லை என்பது குறித்து மிகவும் விளக்கமாகவும் அறிவுபூர்வமாகவும் பதில் அளித்து அசத்தியிருக்கிறார். இது ரோகித் சர்மா கூறியதற்கு நேர் எதிராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய அணியை ஆஸி தோற்கடிக்கும்.. ஆனா ஒரு விஷயம்தான் சந்தேகமா இருக்கு – மைக்கேல் வாகன் கணிப்பு
இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறும் பொழுது “நான் டி20 கிரிக்கெட்டுக்கு ஒரு ஓவருக்கு ஆறு பந்துகளை அமைக்கும் விதம் அதற்கான வேரியேஷன்கள் என்பது வேறானது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் என்று வரும் பொழுது இதற்கு அமைக்கும் முறை வேறானது. இதன் காரணமாகவே நான் அதிக வேரியேஷனை வலைப்பயிற்சியில் கொண்டு வருவதில்லை. மற்றபடி நான் தேவைப்பட்டால் அதிக வேரியேஷனை வலைப்பயிற்சியில் கொண்டு வருவேன்” என்று கூறி இருக்கிறார்.






