“ஐபிஎல் 2024.. முதல் 4 இடமா?.. கடைசி 4 இடத்துலதான் இந்த டீம் வரும்” – கவாஸ்கர் மதிப்பீடு

0
127
Ipl2024

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால், ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பது குறித்தான எந்த அறிவிப்புகளும் இன்னும் வராமல் இருக்கின்றன. அதே சமயத்தில் ஐபிஎல் தொடர் இந்தியாவுக்கு வெளியில் நடக்காது என்பதும் தெரிந்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ஏறக்குறைய இன்னும் ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாதக்காலங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் ஐபிஎல் குறித்தான பேச்சுகள் மிகவும் பரபரப்பாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகள் குறித்தும் தன்னுடைய மதிப்பீடுகளை முன் வைத்து வருகிறார். அதில் இந்த முறை அவர் பஞ்சாப் அணியை முன்வைத்து தன்னுடைய பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பதினாறு வருட ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான செயல்பாட்டை கொண்ட அணி என்றால் அது பஞ்சாப் கிங்ஸ் அணிதான். அவர்களைப் போன்று அதிகப்படியான மாற்றங்களை ஆண்டுதோறும் அணியில் செய்தவர்கள் யாருமே கிடையாது.

அதே சமயத்தில் இந்த வருடத்தில் அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய சாம் கரனை வெளியே விட்டு பெரிய தொகைக்கு மற்ற வீரர்களை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து செய்த தவறை திருத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை நடைபெற்ற மினி ஏலத்தில் அவர்கள் பெரிய அளவில் வீரர்களை வெளியே விடவில்லை.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” பஞ்சாப் கிங்ஸ் அணியை பொருத்தவரை எடுத்துக் கொண்டால் அவர்கள் முதல் நான்கு இடங்களில் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. கடைசி நான்கு இடத்தில்தான் வருவார்கள். என்னுடைய கருத்தை அவர்கள் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள்.

அவர்கள் பெரும்பாலும் சிகர் தவானின் பேட்டிங்கையே நம்பி இருக்கிறார்கள். அவர் எப்பொழுதும் எல்லா ஐபிஎல் தொடர்களிலும் பெரிய அளவில் ரன்கள் கொண்டுவரக்கூடிய வீரராக இருந்திருக்கிறார். எனவே இந்த முறையும் அவர் பெரிய அளவில் ரன்கள் கொண்டு வந்தால் அந்த அணிக்கு அது மிகவும் உதவியாக அமையும்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிடில் ஆர்டர் கொஞ்சம் வீக்காக தெரிகிறது. இந்த அணிக்கு அது கவலை அளிக்க கூடிய விஷயமாக அமைகிறது. மேலும் இந்த முறை அவர்களுக்கு கொஞ்சம் பலமான பவுலிங் யூனிட் கிடைத்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.

இதையும் படிங்க : “என் ஹீரோ யாரும் இல்ல இவர்தான்.. டெஸ்ட் தொப்பியை அவருக்கே கொடுப்பேன்” – துருவ் ஜுரல்

ஆனால் அவர்கள் பவுலிங் யூனிட் எடுத்துக் கொண்டால் அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தில் விளையாட வருகிறார்கள் என்பதை பொறுத்துதான் அமையும். மொகாலி என்பது வரை எல்லாம் ஓகே. ஆனால் அவர்கள் வெளி ஆடுகளங்களில் செல்லும் பொழுது, இந்த பவுலிங் யூனிட் என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.