தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து மனசோர்வு காரணமாக இஷாந்த் கிஷான் விலகிக் கொண்டதால், மேற்கொண்டு அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பரிசீலனை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயதான வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக கேஎஸ்.பரத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய பேட்டிங் கவலை அளிப்பதாக இருக்கிறது.
இதன் காரணமாக துருவ் ஜுரலுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இம்பேக்ட் பிளேயராக வந்து எல்லோரும் கவனத்தையும் இந்த இளைஞர் கவர்ந்திருந்தார்.
மேலும் நேற்று பயிற்சியில் இவர் நீண்ட நேரம் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். இவரை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் கண்காணித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணிக்காக அறிமுகமாவது தொடர்பாக பேசிய துருவ் ஜுரல் “எனக்கு இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு தொப்பி கிடைத்தால், அதை என்னுடைய தந்தைக்கு அர்ப்பணிக்க நினைக்கிறேன். எனக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் அவர்தான் எனக்கு அதை தீர்த்து வைக்கக் கூடியவர். அவர்தான் என்னுடைய ஹீரோ.
உண்மையை சொல்வது என்றால், இந்திய அணியில் என்னுடைய பெயரை பார்த்ததும் எனக்கு பதட்டம்தான் உண்டானது. நான் அணியின் பேருந்தில் செல்லும் பொழுது எங்கு அமர்வது என கவலைப்பட்டேன்.
இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. ஒரு அனுபவ வீரர்கூட கிடையாது.. நியூசிலாந்தை சம்பவம் செய்த தென் ஆப்பிரிக்கா
காரணம் யாராவது வந்து இது என்னுடைய இருக்கை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதுதான். இதனால் எட்டு மணிக்கு பேருந்து புறப்படுகிறது என்றால், நான் 7:59க்கு சென்று, எல்லோரும் அவரவர் இடத்தில் அமர்ந்த பிறகு, மீதம் இருக்கும் இடத்தில் நான் அமர்ந்து கொள்வேன்” என்று கூறியிருக்கிறார்.