கான்ஸ்டாஸ் திமிரான வீரர்தான்.. ஆனா அவர்கிட்ட இந்த இன்னொரு ஸ்பெஷல் குணமும் இருக்கு – உஸ்மான் கவாஜா பேட்டி

0
476

தற்போது நடைபெற்ற முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார்.

இந்த நிலையில் அவர் ஆடுகளத்தில் செயல்படும் விதம் குறித்து மற்றொரு தொடக்க சக ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா இளம் தொடக்க வீரர்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். தனது அறிமுக போட்டியிலேயே பும்ராவின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு விளையாடியதோடு ஆடுகளத்தில் விராட் கோலிக்கும் இவருக்கும் இடையே சிறிய மோதலும் ஏற்பட்டது.

அது மட்டுமல்லாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா பந்து வீச வந்த போது எதிர் முனையில் இருந்த சாம் கான்ஸ்டாஸ் அவரோடு சிறிய வார்த்தை போரில் ஈடுபட்டார். இது இந்தத் தொடரின் ஹாட் டாபிக்காக தற்போது அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மற்றொரு சக ஆஸ்திரேலியா தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா சாம் கான்ஸ்டாஸ் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதாவது திமிரான ஆனால் ஒரே நேரத்தில் அன்பான இப்படி ஒரு வீரரை பார்த்ததில்லை என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு வீரரை பார்த்ததில்லை

இது குறித்து உஸ்மான் கவஜா கூறும் பொழுது “நான் நேர்மையாக இருக்கப் போகிறேன். இவ்வளவு திமிர் பிடித்த யாரையும் நான் ஒரே நேரத்தில் சந்தித்ததில்லை. ஆடுகளத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்பதை நீக்கி விடுங்கள். ஆனால் ஒரு குழுவாக நாங்கள் இருக்கும் போது அவர் மிகவும் அன்பான வீரராக இருக்கிறார். இந்த ஆணவ உணர்வு அவரிடம் உள்ளது. ஆனால் சிரித்த முகத்தோடு எப்போதும் பேசக்கூடிய நபராக இருக்கிறார்.

இதையும் படிங்க:முடிந்த ஆஸி தொடர்.. இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் போட்டி எப்போது.?. எந்த அணியுடன் மோதல்.?. முழு விபரம்

அதனால் அவர் கூறுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் அவரைப் பற்றிய தகவல்களை குறிப்பிடுகளின் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார். சாம் கான்ஸ்டார்ஸ் தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்து தனது திறமையை நிரூபித்த நிலையில் எதிர்காலத்தில் மிகச் சிறந்த வீரராக வருவதற்கு அவரிடம் அனைத்து விதமான தகுதிகளும் இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -