இந்திய கிரிக்கெட் லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விராட் கோலி இடம் சில குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நடப்பு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறந்த முறையில் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகளில் விராட் கோலி சுலபமாக விளையாடுவார் என்பதால் இந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பிடிவாதமாக தனது பலவீன பகுதியில் விளையாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் வெறுப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.
விராட் கோலியின் தீராத பிரச்சனை
விராட் கோலிக்கு ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தில் பலவீனம் இருக்கிறது. இதன் காரணமாக தனக்கு பின்புறத்தில் இருக்கும் பீல்டர்களிடம் சிக்குகிறார். அதே சமயத்தில் அப்படியான பந்துகளை தவிர்த்து விளையாடுவது எளிமையானது. ஆனால் விராட் கோலி தொடர்ந்து பிடிவாதமாக அப்படியான பந்துகளை விளையாடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.
இதன் காரணமாக விராட் கோலி தொடர்ந்து ஆட்டம் இழப்பது அணிக்கு பெரிய பின்னடைவை இந்த தொடரில் உருவாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் அணி நிர்வாகம் அவரிடம் ஏன் கண்டிப்பு காட்டுவதில்லை? இதுகுறித்து கொஞ்சமாவது ஏதாவது அழுத்தி கூறினால் அவர் தன்னை மாற்றிக் கொள்வாரா? என்பது குறித்து சாதாரண ரசிகர்களிடமும் கேள்விகள் இருக்கிறது.
கம்பீர் இதை செய்ய வேண்டும்
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும்பொழுது “கவுதம் கம்பீர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் விளையாடும் பொழுது எப்பொழுதும் ஸ்லீப் மற்றும் கல்லியில் பந்தை தட்டுவார். எனவே அவருக்கு விராட் கோலியின் பிரச்சனை என்னவென்று நன்றாகவே தெரியும். இதை கம்பீர் ஒரு வீரராகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பார்த்திருக்கிறார். தற்போது ஒரு பயிற்சியாளராக எது தவறு என்று தெரிந்தால் அவர் அதை வீரர்களிடம் கூற வேண்டும்”
இதையும் படிங்க : கடைசி சிட்னி டெஸ்ட்.. ஆஸி பிளேயிங் XI அறிவிப்பு.. அதிரடி வீரர் அறிமுகம்.. இந்திய அணிக்கு செக்
“இந்திய அணியில் பயிற்சியாளர் குழுவில் பேட்டிங் சம்பந்தமாக அபிஷேக் நாயரின் பங்கு என்ன? அவர் பேட்டிங் பயிற்சியாளரா அல்லது பேட்டிங் துணை பயிற்சியாளரா? அவரைவிட கம்பீர் நிறைய ரன்கள் எடுத்திருக்கிறார். எனவே அவர் களத்திலிருந்து பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாட வேண்டும்? என்று வழிகாட்டினால், அது சிறப்பானதாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.






