இந்திய கிரிக்கெட்

குல்தீப்க்கு பதிலா.. விராட் கோலி அங்க இருந்திருந்தா.. கதையே வேற.. பாக் போட்டி குறித்து சுனில் கவாஸ்கர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் இந்திய அணியின் பீல்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கிண்டலான விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாசை இழந்த இந்திய அணி முதலில் பந்து வீச ஆரம்பிக்க பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும். பாபர் அசாம் தொடக்க இடத்தில் களமிறங்கி 26 பந்துகளில் 5 பௌண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் முற்றிலுமாக குறைந்தது. இருப்பினும் மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் சவுகத் சகீல் ஓரளவு நிலைத்து நின்று பாகிஸ்தான் அணியின் ரன்கள் உயர்வதற்கு உதவினார். அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் மெதுவான ஆட்டத்தால் 46 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்த நிலையில் ஆட்டத்தின் 34 ஆவது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் அக்சார் பட்டேல் வீச அதனை சவுகத் சக்கீல் எதிர்கொண்டார்.

விராட் கோலி தான் தேவை

அவரது பந்தை வைடு லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க, அந்த திசையில் நின்று கொண்டிருந்த குல்தீப் யாதவ், மெதுவாக ஓடி வந்ததால் கொடுக்கப்பட்ட கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் அது இந்திய அணியை பெரிதாக பாதிக்காத நிலையில் சவுகத் 76 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இதனை கவனித்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் குல்தீப் யாதவ் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பு குறித்து கிண்டலான விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க:பாக் அணியை தப்பா எடை போட வேணாம்.. இந்திய அணிக்கு இப்போ இந்த சிக்கல் இருக்கு – ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து

இதுகுறித்து அவர் கூறும் போது “குல்தீப் யாதவ் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பு குறித்து கூறும் போது விராட் கோலி மாதிரியான ஒரு வீரர் அந்த திசையில் தேவை. குல்தீப் யாதவ் அந்த வாய்ப்பை அவரால் அடைய முடியவில்லை. ஆனால் விராட் கோலி அந்த கேட்ச் பிடிப்பதற்கு சௌகரியமாக அந்த திசைக்கு சென்று இருப்பார்” என்று கிண்டலான நான் விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 241 ரன்கள் குவிக்க, இந்திய அணி அதை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

- Advertisement -
Published by

Recent Posts