இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது. இந்திய அணி அடுத்து சேஸ் செய்ய களம் இறங்குவதற்கு தயாராக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
துபாயில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் லீக் தொடரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம் மற்றும் இமாம் உல்ஹக் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஓரளவு நன்றாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 41 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 23 ரன்னில் வெளியேறிய பிறகு களம் இறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் மெதுவான ஆட்டத்தை விளையாடினார்கள். இறுதியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 49.4 ஓவரில் 241 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி மெதுவான ஆட்டத்தை விளையாடுகிறது என கிரிக்கெட் வர்ணனையாளர்களே விமர்சனம் செய்த நிலையில், இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் அணி விளையாடுகிற விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி போல இது கிடையாது எனவும், இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது பின்னர் ரன்கள் குவிப்பது கடினம் என்ற சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
எளிதான விஷயம் கிடையாது
இது குறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது ” துபாய் ஆடுகளத்தை பொறுத்தவரை இங்கு மெதுவான ஆடுகளமாகத்தான் இருக்கும். பாகிஸ்தான் அணி இதற்கு முன்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது போல இந்த இன்னிங்ஸ் உடன் ஒப்பிட்டு குழப்ப வேண்டாம். இந்த ஆடுகளத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் சேசிங் செய்தது என்பது எளிதான காரியம் கிடையாது.
இதையும் படிங்க:200-300.. ஹர்திக் குல்தீப் ஸ்பெஷல் ரெக்கார்ட்.. ஒரே போட்டியில் சோகமும் சாதனையும் நடக்குமா?
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறும் போது “துபாயில் கடந்த 10 ஒரு நாள் ஆட்டங்களில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் என்பது 198 ரன்கள் ஆகும். இங்கு பேட்டிங் செய்வது என்பது கடினமான விஷயமாகும். எனவே இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் நன்றாக பேட்டிங் செய்வது மிகவும் அவசியம். ஆனால் இதுவே பாகிஸ்தானில் பேட்டிங் செய்வது என்பது மிகவும் எளிதான காரியம். கடந்த 10 ஆட்டங்களில் பாகிஸ்தானில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் என்பது 300 ஆகும். அதுவே இங்கு கிட்டத்தட்ட 200 ரன்கள் போன்றதாகும்” என்று பேசி இருக்கிறார்.