ஐபிஎல் 2025

பிசிசிஐ அந்தப் பையனுக்கு இந்த அநியாயம் செய்யக்கூடாது.. அவர் என்ன தப்பு செஞ்சாரு – சுனில் கவாஸ்கர் ஆதரவு

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் சுழற் பந்துவீச்சாளர் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான விஷயங்கள் பேசியிருக்கிறார்.

தனித்துவமான கொண்டாட்டத்தில் லக்னோ வீரர்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் அந்த அணி நான்கு போட்டிகளில் வெற்றி மற்றும் இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியல் தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக திக்வேஷ் ரதி செயல்பட்டு வருகிறார்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய அவர் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி, இந்திய அணிகள் இடம் பிடிக்கும் அளவுக்கு சுழற் பந்துவீச்சில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டை வீழ்த்திய பிறகு தனது தனித்துவமான கொண்டாட்டத்தின் காரணமாக பிசிசிஐயால் அபராதம் விதிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் அந்த தொகையை செலுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் சுனில் கவாஸ்கர் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ இப்படி செய்யாதீங்க

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” திக்வேஷ் தனித்துவமான செயல்பாட்டை பொருத்தவரை முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரியான்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கையெழுத்திட்டு அவரை பெவிலியனுக்கு அனுப்புவது போல கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது சரியானது தான். ஏனென்றால் ஒரு வீரர் ஆட்டம் இழந்த பிறகு டக் அவுட்டில் வெளியேறி கொண்டிருந்தபோது அந்த வகையான கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தவறாகும். எனவே அதற்கு அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:18 வருடம்.. சிஎஸ்கே அணிக்காக அறிமுகத்தில் ஷேக் ரசீத் ஸ்பெஷல் சாதனை.. கலக்கலான ஆரம்பம்

ஆனால் அதற்குப் பிறகு அவர் பேட்ஸ்மேன் அருகில் கூட செல்லவில்லை. ஆனால் அதற்கும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது அவர் மட்டையாளரின் அருகிலோ அல்லது முகத்திற்கு நேராக கூட இல்லை. எனவே அவருக்கு அந்த வகையான அபராதம் தொடர்ந்து விதிக்கப்பட்டு இருக்க கூடாது” என்று சுனில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நமன் திர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது அவருக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts