18 வருடம்.. சிஎஸ்கே அணிக்காக அறிமுகத்தில் ஷேக் ரசீத் ஸ்பெஷல் சாதனை.. கலக்கலான ஆரம்பம்

0
982
Rasheed

இன்று சிஎஸ்கே அணிக்காக முதல் முறையாக களம் கண்ட இளம் வீரர் ஷேக் ரசீத் அறிமுக போட்டியிலேயே நல்ல துவக்கத்தை கொடுத்து அசத்தல் சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே அணி லக்னோ அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் மற்றும் கான்வே இருவரும் நீக்கப்பட்டார்கள். அவர்களுடைய இடத்திற்கு இளம் வீரர் ஷேக் ரசீத் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரும் கொண்டுவரப்பட்டார்கள்.

- Advertisement -

தோனியின் அதிரடி முடிவு

சிஎஸ்கே அணி ஆரம்பத்தில் தோல்விகளை சந்திக்கும்பொழுதே சிஎஸ்கே ரசிகர்கள் மூன்று ஆண்டுகளாக அணியில் பெஞ்சிலேயே இருக்கும் இளம் வீரர் ஷேக் ரஷீத்துக்கு வாய்ப்பு தர வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்கள். மற்ற அணி நிர்வாகங்கள் புதிய வீரர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கொடுத்து சாதித்து வருகிறது. இதை சிஎஸ்கே ரசிகர்களை நிறைய கோபப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தோனி கேப்டன் பொறுப்புக்கு வந்த முதல் போட்டிக்கு வழக்கமான முறையில் சென்றார். ஆனால் அது பலன் தராததும் உடனடியாக இன்று அஸ்வினையே வெளியே வைக்கும் அளவுக்கு உடனேயே அதிரடி முடிவு எடுத்து மாறிவிட்டார். இதற்கு கை மேல் பலனும் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

ஆறு பவுண்டரிகளுடன் அசத்தல் சாதனை

இன்றைய போட்டியில் வாய்ப்பு பெற்ற ஷேக் ரஷீத் போட்டியின் முதல் பந்தை எதிர்கொண்டார். மெதுவாக ஆரம்பித்த அவர் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடிக்க ஆரம்பித்தார். இன்றைய போட்டியில் 19 பந்துகளை சந்தித்த அவர் ஆறு பவுண்டரிகள் உடன் 27 ரன்கள் எடுத்தார். தவறான ஷாட் செலக்சன் காரணமாக ஆட்டம் இழந்தார்.

இந்த சூழ்நிலையில் அவர் தவறான ஷாட் செலக்சன் செய்து ஆட்டம் இழந்து இருந்தாலும் கூட அவருக்கு நல்ல திறமை இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியதன் மூலம், சிஎஸ்கே அணிக்கு மிகக்குறைந்த வயதில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இப்பவும் கில்லிதான்.. கேப்டன்ஷியில் தல தோனி ஆட்டம் ஆரம்பம்.. தரமான 2 செய்கை.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

20 வயது 202d – ஷேக் ரஷீத்
22 வயது 132 டி – சாம் கர்ரன்
23 வயது 041டி – பார்த்தீவ் படேல்

- Advertisement -