59 பந்து 110 ரன்.. இந்திய வீராங்கனை திரிஷா வரலாற்று சாதனை.. U19 மகளிர் டி20 உலக கோப்பை

0
230
Trisha

தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வீராங்கனை கோங்காடி த்ரிஷா சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்திய அணி நடப்பு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் தங்களது பிரிவில் முதல் இடத்தை பிடித்து சூப்பர் சிக்ஸ் சூற்றுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது.

- Advertisement -

அசத்தல் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவரில் 147 ரன்கள் என்ற மெகா பார்ட்னர்ஷிப் வந்தது. துவக்க வீராங்கனை ஜி.கமாலினி 42 பந்தில் 9 பவுண்டரிகள் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய இன்னொரு துவக்க வீராங்கனை கோங்காடி திரிஷா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 53 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 110 ரன்கள் குவித்தார். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

வரலாற்று சாதனை படைத்த திரிஷா

இதைத் தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 14 ஓவர்களில் 58 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் ஆயூசி சுக்லா நான்கு விக்கெட் கைப்பற்றினார். வைஷ்ணவி சர்மா மற்றும் கோங்காடி திரிஷா தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : பும்ரா விராட் இல்ல.. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் கேம் சேஞ்சர் இவர்தான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

மேலும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்ததின் மூலமாக, இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் சதம் அடித்த வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை கோங்காடி திரிஷா படைத்திருக்கிறார்.

- Advertisement -