இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று மாற்றங்களை செய்திருப்பதற்கு காரணம் இந்திய அணி நிர்வாகம் பீதி அடைந்திருப்பது தான் என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மகாராஷ்டிரா புனே மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் தேர்வு செய்திருக்கிறது.
புனே மைதானத்தை பொருத்தவரையில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே போட்டியை வெல்லும். இந்த வகையில் இன்று இந்திய அணி டாசை இழந்தது எடுத்ததும் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆகாஷ் தீப் மூன்று பேர் உள்ளே வர குல்தீப் யாதவ், முகமது சிராஜ், கேஎல்.ராகுல் வெளியே சென்று இருக்கிறார்கள்.
நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி இடத்திற்கு மிட்சல் சான்ட்னர் கொண்டுவரப்பட்டிருக்கிறார். தற்போது இந்திய அணி ஒரே போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்திருப்பது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “டீம் இந்தியா எடுத்திருக்கும் முடிவு பீதியால் என்று நினைக்கிறேன். நீங்கள் இப்படி அடிக்கடி மூன்று வீரர்களை மாற்றும் வேலையை செய்வது கிடையாது. நீங்கள் முதல் போட்டியில் தோற்று பீதி அடைந்த காரணத்தினால்தான் இத்தனை மாற்றங்களை செய்து இருக்கிறீர்கள்”
இதையும் படிங்க : டாஸ் சாதகமா இல்ல.. இப்போ நியூசிலாந்து அணி நினைக்கிறத எங்களுக்கு சாதகமாக்க நாங்க இத செஞ்சே ஆகணும் – ரோகித் சர்மா பேட்டி
“வாஷிங்டன் சுந்தரை உள்ளே கொண்டு வந்ததற்கான முக்கிய காரணம் அவர்கள் தங்களுடைய பந்துவீச்சு குறித்து கவலைப்படவில்லை. வாஷிங்டன் சுந்தர் கொடுக்கும் பேட்டிங் குறித்து அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் தங்களின் பேட்டிங் பற்றி கவலைப்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.