டாஸ் சாதகமா இல்ல.. இப்போ நியூசிலாந்து அணி நினைக்கிறத எங்களுக்கு சாதகமாக்க நாங்க இத செஞ்சே ஆகணும் – ரோகித் சர்மா பேட்டி

0
151

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியை மிகுந்த நம்பிக்கையோடு எதிர் கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிற நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.

ஆடுகளம் உலர்ந்து காணப்படும் நிலையில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய போட்டியாக உள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டியது அவசியம். எனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் போடும்போது சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

முதல் 10 ஓவர்கள் முக்கியம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் டாஸ் வென்றால் பேட்டிங்கையே முதலில் தேர்வு செய்திருப்பேன். இதற்கு முந்தைய டெஸ்டில் நாங்கள் விளையாடும் போது முதல் செஷன் எங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தோம். நாங்கள் அதிலிருந்து நிறைய நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் விஷயங்களை எவ்வாறு மாற்றி தங்களுக்கு சாதகமாக அமைப்பது என்று பார்க்கிறோம்.

இதையும் படிங்க:வார்னர் சொல்றது குழப்பமா இருக்கு.. எங்க டீமுக்கு இந்த பிரச்சனை இருக்குறனால அவர் அங்கதான் பேட்டிங் வரணும்- ஆஸி லபுஷேன் கருத்து

நீங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து பின் தங்கியிருக்கும் போது முன்னேறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும். அதைத்தான் தற்போது நாங்கள் செய்திருக்கிறோம். ஆடுகளம் சற்று உணர்ந்து காணப்படுகிறது எனவே முதல் 10 ஓவர்கள் முக்கியம் என்பதை அறிவோம். மூன்று மாற்றங்களாக சிராஜ் குல்தீப் யாதவ் மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு பதிலாக ஆகாஷ் தீப் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கில் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -