இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்ள் உள்நாட்டுப் போட்டிகளில் பயிற்சிக்காக விளையாடாதது குறித்து சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியவீரர்கள் நீண்ட ஓய்வில் இருந்தார்கள். இதற்குப் பிறகு நடைபெற்ற உள்நாட்டு டெஸ்ட் தொடர் துலீப் டிராபியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா போன்ற மூத்த வீரர்கள் பயிற்சிக்காக பங்கேற்கவில்லை. ஆனால் இளம் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
வார்னேவுக்காக சச்சின் தயாரான விதம்
இதுகுறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் ஆக இருப்பதற்கு இதுதான் காரணம். அவர் அனிக்காக என்ன செய்ய முடியும்? அவர் அனிக்காக என்ன செய்ய விரும்புகிறார்? என்பதில் அவர் பெருமிதம் கொண்டார். இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி இரட்டை சதம் அடித்ததை மறந்து விடாதீர்கள்”
“பின்னர் அவர் சென்னை சென்று சுழல் பந்துவீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனை ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து பந்தை வீச சொல்லி பயிற்சி பெற்றார். மேலும் அந்தப் பகுதியில் ஆடுகளத்தை கரடு முரடாக மாற்றிக் கொண்டார். இதன் மூலம் வார்னேவை எதிர் கொண்டு ஸ்லாக் ஸ்வீப் மற்றும் இன்சைட் அவுட் ஷாட் விளையாடுவதற்கு பயிற்சிகள் எடுத்தார்”
எல்லோரும் செய்ய வேண்டியது இதுதான்
“சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் 16,000 ரன்கள் எடுப்பதற்கும் ஒட்டுமொத்தமாக 100% அடிப்பதற்கும் இதுதான் காரணமாக இருந்தது. இப்படியான தயாரிப்பை எல்லா வீரர்களுமே செய்ய வேண்டும். நீங்கள் ஒரு இடைவெளி எடுத்த பிறகு இப்படி எல்லாம் செய்யவில்லை என்றால், உங்கள் உடல் ரியாக்ட் செய்யும் வேகம் மிகவும் குறைவாகிவிடும். பிறகு நீங்கள் திரும்பி வர நீண்ட நேரம் எடுக்கும்”
இதையும் படிங்க : ஆப்கான் பங்களாதேஷ் ODI தொடர்.. இந்தியாவில் எப்படி பார்க்கலாம்.?.. போட்டி தொடங்கும் நேரம் மற்றும் பிற விவரங்கள்
“இது கிரிக்கெட்டில் மட்டும் இல்லை எல்லா விளையாட்டுகளிலும் இருக்கிறது. நீங்கள் டென்னிசை எடுத்துக் கொண்டால் 30 வயதில் இருப்பவர்கள் ஏதாவது காரணத்திற்காக அல்லது காயத்திற்காக ஓய்வுக்கு திரும்பி சென்று விட்டு வந்தால், அவர்களால் பழைய நிலைக்கு வர முடிவதில்லை. அவர்கள் போட்டியை வெல்வது கடினம் ஆகிறது” என்று கூறியிருக்கிறார்.