ஆப்கான் பங்களாதேஷ் ODI தொடர்.. இந்தியாவில் எப்படி பார்க்கலாம்.?.. போட்டி தொடங்கும் நேரம் மற்றும் பிற விவரங்கள்

0
286

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் துபாயில் உள்ள ஷாரஜாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளும் விளையாடும் போட்டிகளை இந்தியாவில் எப்படி பார்க்கலாம் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஒருநாள் தொடர்

சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து குறுகிய காலமே ஆகினாலும் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து தங்களது திறமையை நிரூபித்திருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் முன்னணி அணிகளை வீழ்த்தி தங்களது திறமையை உலகிற்கு நிரூபித்ததோடு கடந்த டி20 உலக கோப்பை தொடரிலும் அரை இறுதி வரை வந்து முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த சூழ்நிலையில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் துபாயில் உள்ள ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. ஐசிசி தரவரிசையில் வங்கதேச அணி எட்டாவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணி ஒரு இடம் கீழே இறங்கி ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் விளையாடிய 16 போட்டிகளில் 10ல் வங்கதேச அணியும், 6ல் ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியாவில் போட்டிகளை எப்படி பார்க்கலாம்

முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இரண்டாவது போட்டி ஒன்பதாம் தேதியும், கடைசி போட்டி 11ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளுமே இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று போட்டிகளும் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் பேன் கோடு இணையதளத்தில் போட்டிகளை காணலாம்.

இதையும் படிங்க:எங்க பாகிஸ்தான் ரசிகர்கள்.. இந்த 4 இந்திய வீரர்களை வணங்கறாங்க.. பிசிசிஐ செம பிளான் பண்ணி இருக்கு – வாசிம் அக்ரம் பேட்டி

ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று மிகுந்த நம்பிக்கையில் உள்ளது. எனவே இரண்டு அணிகளுமே தற்போது சம பலமாக இருக்கும் நிலையில் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியம் அளிக்க கூடிய வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வங்கதேச அணியும் பேட்டிங், பந்து வீச்சு என்று இரண்டு துறைகளிலும் சமபலமாக இருப்பதால் ஆப்கானிஸ்தான் அணிக்கு கடும் போட்டியாக இருக்கும்.

- Advertisement -