இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தொலைக்காட்சி வர்ணனையில் இருந்த கவாஸ்கர் தினேஷ் கார்த்திகை ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய அணி உள்நாட்டில் பதினெட்டு பெஸ்ட் தொடர்களுக்கு பிறகு முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை இழப்பதற்கு மிக அருகில் இருக்கிறது. 12 வருடங்களாக உள்நாட்டில் எந்த டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை என்கின்ற பெருமையை இந்திய அணி இழக்கப் போகிறது.
இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. குறைந்தபட்சம் ஆண்டு இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளை ஆவது வெல்ல வேண்டிய கட்டாயம் தற்பொழுது உருவாகி இருக்கிறது.
இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கெட் வர்ணனையில் தினேஷ் கார்த்திக் மற்றும் சுனில் கவாஸ்கர் இருவரும் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு அடுத்து ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய டெஸ்ட் தொடர் வருகிறது என்று பேச ஆரம்பித்தார். அப்பொழுது குறிப்பிட்ட சுனில் கவாஸ்கர் அதை பேச வேண்டாம் என்று தடுத்தார்.
இதுகுறித்து குறுக்கிட்டு பேசிய சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை பற்றி இப்பொழுது பேசாதீர்கள். இது பலரும் செய்யும் தவறாக தொடர்ந்து இருந்து வருகிறது. தற்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது அதில் நாம் கவனம் வைக்க வேண்டும். ஆஸ்திரேலியா தொடர் வரும்பொழுது அதை பார்த்துக் கொள்ளலாம். கடந்த இரண்டு முறை நீங்கள் அங்கு சென்று நல்ல முறையில் செய்து இருக்கிறீர்கள்”
இதையும் படிங்க: தாங்க முடியாமல் மெசேஜ் அனுப்பினேன்.. சேவாக் நீ தேவையில்லைனு சொல்லிட்டார் – மேக்ஸ்வெல் வருத்தம்
“வீரர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில்லை. ஆனால் சுற்றி இருக்கும் மீடியாக்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த தொடர் குறித்து பெரிய பரபரப்பை உண்டாக்குகின்றன. தொடர்ந்து ஆஸ்திரேலிய தரப்பிலிருந்து இந்த தொடர் குறித்து நிறைய பேசப்படுகிறது. அவர்கள் இந்திய அணி குறித்து நிறைய பேசுகிறார்கள். இனிமேல் எங்களிடமும் கேளுங்கள் நாங்களும் ஆஸ்திரேலியா அணி பற்றி பேசுகிறோம். ஆஸ்திரேலியா அணியில் யார் இருக்க வேண்டும்” என்று சொல்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்.