ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த பொழுது அந்த அணிக்கு மென்டராக இருந்த இந்திய வீரர் ஷேவாக் நடந்து கொண்ட விதம் குறித்து வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. இதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் கொண்டுவரப்பட்டார்.
சேவாக் என்னிடம் கூறினார்
இது குறித்து மேக்ஸ்வெல் கூறும்பொழுது ” இந்திய டெஸ்ட் தொடரில் நாங்கள் சந்தித்த பொழுது சேவாக்கு என்னிடம் நான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கப் போகிறேன் என்று கூறினார். அப்பொழுது அவர் ஓய்வு பெற்றிருந்த காரணத்தினால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மென்டராக வரவிருப்பதாக தெரிந்தது.மேலும் நாங்கள் அணி எப்படி அமைய வேண்டும் இன்று விவாதித்தோம். அப்போது நாங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருப்பதாக நான் நினைத்தேன்”
“நான் அந்த நேரத்தில் நிறைய தவறு செய்து விட்டேன். எங்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜெ. அருண்குமாருக்கு அவர் பெயரளவில் மட்டுமே பயிற்சியாளராக இருக்கிறார் என்று நன்றாகவே தெரிந்தது. சேவாக் எல்லா விஷயங்களிலும் தலையிட்டார். அப்போது என்ன நடக்கிறது என்று வீரர்களும் பயிற்சியாளர்களும் என்னிடம் கேட்ட பொழுது, அவர்களிடம் நேரடியாக பதில் அளிப்பதற்கு எனக்கு கடினமாக இருந்தது”
நீ தேவையில்லை என்று சொன்னார்
மேலும் பேசிய மேக்ஸ்வெல் கூறும் பொழுது ” நாங்கள் அந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியை முடித்துக் கொண்டு பேருந்தில் சென்ற பொழுது நான் அணியின் முக்கிய வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டேன். அடுத்து நாங்கள் ஹோட்டலை அடையும் பொழுது சேவாக் எனக்கு தொலைபேசி அழைப்பில் வந்தார். அவர் நான் கேப்டன் பொறுப்பில் சரியாக செயல்படவில்லை என்று என் மீது குற்றம் சாட்டினார். நாங்கள் நல்ல நிலையில் பிரிந்து விட்டதாக நினைத்தபொழுது இது நடந்தது”
இதையும் படிங்க : வெறும் 16 ஓவர்.. இலங்கை பைனலுக்கு தகுதி.. பாகிஸ்தான் அணி வெளியேறியது.. எமர்ஜிங் ஆசியா கப் 2024
“நான் இதனால் எவ்வளவு காயப்பட்டேன் என அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதில் நீங்கள் ஒரு நல்ல ரசிகனை இழந்து விட்டீர்கள் என அதில் தெரிவித்திருந்தேன். அப்போது அதற்கு திருப்பி பதில் அளித்து இருந்த சேவாக் ‘உன்னைப்போல் ஒரு ரசிகன் எனக்கு தேவை இல்லை’ என்று சொல்லிவிட்டார். பிறகு நாங்கள் பேசிக் கொள்ளவே இல்லை” என்று கூறி இருக்கிறார்.