இந்திய பவுலர்கள் பிங்க் நிற பந்தில் எப்படி பந்து வீச வேண்டும்? என தெரியாமல் இருக்கிறார்கள் என இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய அணி தற்போது பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கைப்பற்றி இருக்கிறது. திடீரென இந்திய அணியின் பந்துவீச்சு சுமாராக மாறியது குறித்து சுனில் கவாஸ்கர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா இன்னைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பும்ரா பந்துவீச்சில் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறினார்கள். அவர் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் விக்கெட் கைப்பற்றினார்கள். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
தற்போது ஆஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியை விட 11 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கிறது. பும்ரா இந்த நான்கில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஒரு விக்கெட்டை நிதிஷ்குமார் ரெட்டி கைப்பற்றி இருக்கிறார். முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இருவருக்கும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.
இது குறித்து சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறும் பொழுது “ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை எவ்வளவு விளையாட வைக்க முடியுமோ அவ்வளவு விளையாட வைக்க வேண்டும். நீங்கள் முடிந்த வரையில் பேட்ஸ்மேனை விளையாட வைக்கும் பொழுது, உங்களுக்கு விக்கெட் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. நீங்கள் ஒன்று இரண்டு முறை பந்தை வெளியில் வீசி செட் அப் செய்யலாம். பின்னர் பந்தை உள்ளே நகர்த்தலாம்”
இதையும் படிங்க : ரோகித் எங்க மண்ணுல பெரிய தப்பு பண்ணிட்டார்.. இனி அவர் கிரிக்கெட் எதிர்காலம் இவ்வளவுதான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு
“முதல் டெஸ்டில் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் லபுசேன் இருவருக்கும் பெர்த் முதல் டெஸ்டின் போது பும்ரா செய்தது போல செய்ய வேண்டும். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தை இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று கூறியிருக்கிறார். இரண்டாவது செஷனில் இந்திய பந்துவீச்சாளர்கள் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.