இந்திய கிரிக்கெட்

விராட் கோலிய ரிக்கி பாண்டிங்கே சொல்லிட்டாரு.. அதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை – சுனில் கவாஸ்கர் பாராட்டு

இன்று தென் ஆப்பிரிக்க எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார். இதற்கு சுனில் கவாஸ்கர் விராட் கோலியை பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய வேண்டுமா? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்.

விராட் கோலி சாதனை

இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் 17 ரன்னில் ஆட்டம் இழந்ததும் உள்ளே வந்த ஆரம்பம் முதல் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். பவர் பிளேவிலேயே இரண்டு சிக்ஸர்கள் அடித்து தனது நோக்கத்தை காட்டினார். மேலும் சிறப்பாக விளையாடிய அவர் 47 பந்தில் அரை சதம் அடித்தார்.

இதைத் தொடர்ந்து விக்கெட் விழுந்த காரணத்தினால் கொஞ்சம் நிதானம் காட்டிய விராட் கோலி சதம் அடித்த பிறகு அதிரடியில் மிரட்டினார். மொத்தம் 120 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 135 ரன்கள் குவித்தார். இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. மேலும் ஒரு நாட்டில் அதிக அரைசதம் அடித்த வீரராகவும், ஒரு கிரிக்கெட் வடிவத்தில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்தார்.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் பாராட்டு

தற்போது விராட் கோலிக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பு அளித்தது குறித்து நிறைய சர்ச்சையான விஷயங்கள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் திரும்பி வந்து தான் யார் என காட்டி இருக்கிறார். அவரது இன்றைய ஆட்டம் பழைய விராட் கோலியின் ஆட்டம் போல மிகச் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : நீ தான் யா கேப்டன்.. கடைசி நேரத்தில் ராகுல் செய்த சம்பவம்.. ரோகித் சர்மாவோடு கோலியும் சிக்சரில் சாதனை.. தென்னாப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “விராட் கோலி உடன் விளையாடியவர்களும், தற்போது விளையாடிக் கொண்டிருப்பவர்களும் ஒரு நாள் வடிவத்தில் அவர் மிகச்சிறந்தவர் என்று கூறுகிறார்கள். ரிக்கி பாண்டிங் விராட் கோலி எல்லா காலத்திலும் சிறந்தவர் என்று கூறுகிறார். ஆஸ்திரேலியர்களிடமிருந்து பாராட்டு பெறுவது சாதாரண விஷயம் இல்லை. மேலும் சச்சின் சாதனைகளை அவர் கடக்க கூடியவராக இருக்கும்போதே அவர் எவ்வளவு சிறந்தவர் என்று நாம் உணர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by