ஸ்ரேயாஸ் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தர முடியாது.. அதை கேட்க நீங்க யாரு.. உரிமை இல்ல – கவாஸ்கர் விமர்சனம்

0
102
Gavaskar

தற்போது ஆசியக் கோப்பை டி20 இந்திய அணி தேர்வு பற்றி நிறைய விமர்சனங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து சுனில் கவாஸ்கர் மிகவும் காட்டமான முறையில் பேசி இருக்கிறார்.

ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் வாய்ப்பு பெறவில்லை. அதே சமயத்தில் கில் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு துணை கேப்டன் பதவியும் பெற்று இருப்பது பலத்த விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.

- Advertisement -

நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்கள்

இந்த நிலையில் இந்திய அணியின் தேர்வுக் குறித்து வெளிநாட்டு வீரர்கள் பலர் கருத்து கூறி வருகிறார்கள். குறிப்பாக ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் பிராட் ஹேடின் இருவரும் இந்திய அணி தேர்வு குறித்து பெரிய அளவில் விமர்சனம் செய்து பேசியிருந்தார்கள்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட்டில் எந்த பங்கும் இல்லாத, இந்திய கிரிக்கெட் பற்றி மிகக் குறைந்த அறிவைக் கொண்டிருக்கிற வெளிநாட்டு வீரர்கள் இந்த விவகாரத்தில் களம் இறங்கி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு சேவையே செய்திருந்தாலும், அவர்களுக்கு கருத்து சொல்லும் உரிமை இதில் கிடையாது”

- Advertisement -

உங்க வேலைய பாருங்க

“அவர்கள் அவர்களுடைய நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியர்களாகிய நம்முடைய கிரிக்கெட் பற்றி அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்கள் நாட்டு அணி தேர்ந்தெடுக்கப்படும் பொழுது அவர்களிடம் அது குறித்து யாரும் எதுவும் கேட்பதில்லை. அவர்கள் தேர்வு மிகச் சரியாக இருப்பது போல எதுவும் பேசுவதும் கிடையாது”

இதையும் படிங்க : என்னால் முடிந்தால் கிரிக்கெட்டில் இந்த விதியை மாற்றி விடுவேன்.. இதை விடவே மாட்டேன் – சச்சின் பேச்சு

“எனவே இந்திய அணி தேர்வின் போது மட்டும் ஏன் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மற்ற நாடுகள் தங்கள் அணிகளை தேர்ந்தெடுக்கும் போது அது குறித்து இந்திய வீரர்கள் கருத்து சொல்வதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? நாங்கள் எங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். வெளிநாட்டினர் எந்த வீரருக்கு வாய்ப்பு தந்தார்கள் தரவில்லை என்பது குறித்து நாங்கள் கவலைப்படுவது கிடையாது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -