இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர லெஜெண்ட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் மாற்ற விரும்பும் ஒரு விதி குறித்து பேசி இருக்கிறார்.
நேற்று தன்னிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற தொகுப்பில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் கிரிக்கெட்டில் அவர் எந்த விதியை மாற்ற விரும்புகிறார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
சர்ச்சையான டிஆர்எஸ் முறை
தற்போது கிரிக்கெட்டில் அவுட் வழங்குவதற்கு தொழில்நுட்பம் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எல்பிடபிள்யு அவுட் முறைக்கு, நடுவரின் அழைப்பு என்ற அம்பையர் கால் முறை இருந்து வருகிறது. இது குறித்து நிறைய சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.
அதாவது கள நடுவர் அவுட் கொடுத்து விட்டால் பந்து ஸ்டெம்பில் கொஞ்சம் பட்டாலும் அவுட் என்று அறிவிக்கப்படும். அதுவே கள நடுவர் அவுட் கொடுக்காவிட்டால் பந்து ஸ்டெம்பில் 50 சதவீதத்திற்கும் குறைவாக பட்டிருக்கும் பொழுது அது அவுட் இல்லை என்று அறிவிக்கப்படுகிறது.
சச்சின் மாற்ற விரும்பும் விதி
இதன் காரணமாக அம்பயர் கால் விதி என்பது இருக்கக் கூடாது எனவும், பொதுவாக எல்பி டபிள்யு அவுட் வழங்குவதற்கு ஸ்டம்ப் மீது பந்து பட்டிருந்தாலே அவுட் கொடுத்து விட வேண்டும் என கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க : என்னை பத்தி அந்த மாதிரி பேச்சு அதிகமாயிடுச்சு.. அதுக்கு பதில் சொல்லதான் அதை செஞ்சேன் – சிராஜ் பேட்டி
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும் பொழுது “என்னால் ஒரு கிரிக்கெட் விதியை மாற்ற முடியும் என்றால் நான் டிஆர்எஸ் விதியில் அம்பயர் கால் முறையை நீக்கி விடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார். இது பந்துவீச்சாளர்களுக்கு உதவக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.






