நேற்று இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் பேட்டிங் பற்றி சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து அணி தான் விளையாடிய கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. சமீபத்தில் இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி மூன்று போட்டிகளையும் தோற்றது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் இங்கிலாந்து அணியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து நிறைய விமர்சனங்களை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் டெல்லியில் நடைபெற்ற போட்டியின் போது புகை மூட்டத்தின் காரணமாக பந்து தமக்கு நன்றாக தெரியவில்லை எனவும் அதனால் வருண் சக்கரவர்த்தி தந்தை தன்னால் கணிக்க முடியவில்லை என்றும் கூறி இருந்தால். பிறகு சென்னையில் வானம் தெளிவாக இருந்த பொழுதும் வருண் சக்கரவர்த்தியை கணிக்க முடியாமல் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக தோற்பது பிரச்சனை கிடையாது, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை சந்தித்து வெல்வோம் அதுதான் முக்கியமானது என பென் டக்கெட் தோல்விக்கு சாக்கு போக்கு கூறி இருந்தார். இவர்கள் இருவரது பேச்சும் இங்கிலாந்து முன்னாள் வீரர்களே விமர்சிக்கும் அளவுக்கு இருந்தது.
இந்த நிலையில் நேற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வாழ்வாசாவா போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 25 ரன்கள் எடுத்த நிலையில் முகமது நபி வீசிய பந்தில் அவரிடமே எளிய முறையில் கேட்ச் கொடுத்து ஹாரி புரூக் ஆட்டம் இழந்தார். முக்கியமான நேரத்தில் விக்கெட்டை சுலபமாக அவர் விட்டது இங்கிலாந்து அணிக்கு பெரிய நெருக்கடியாக மாறியது.
இதையும் படிங்க : அவங்க சொல்லிட்டாங்க.. நியூஸி மேட்சுக்கு இந்த 2 இந்திய வீரர்களுக்கு ஓய்வு.. 2 பேர் புதுசா வர்றாங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் தனது விமர்சனத்தில் “புரூக் ஆட்டம் இழந்த விதத்தை நான் இப்பொழுதுதான் பார்த்தேன். லாகூரில் விளக்குகள் சரியாக எரியவில்லையா? ஏனென்றால் டெல்லியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய பொழுது புகைமூட்டமாக இருந்ததாகவும் பந்தை சரியாக பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். அதனால்தான் நான் இதைக் கேட்கிறேன். லாகூரில் விளக்குகள் நன்றாக எரிந்ததுதானே? அவர் கொடுத்த கேட்ச் பயிற்சியை பார்க்கும் பொழுது எனக்கு அப்படி தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.