என்ன பும்ரா இப்படி ஆயிட்டீங்க?.. 2வது பந்து கிடைச்சும் அதை செய்ய முடியலையே – கவாஸ்கர் விமர்சனம்

0
0

​நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நியூ பால் மூலம் ஜஸ்பிரித் பும்ரா அபாயகரமாக பந்து வீசவில்லை என்று இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எச்சரித்து பேசியிருக்கிறார்.

​கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் 19 ஓவர்கள் வீசிய பும்ரா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இறுதி செஷனில் அவரது வேகம் மணிக்கு 127 முதல் 130 கிலோமீட்டர் என்ற அளவில் குறைந்திருந்தது.

- Advertisement -

​மேலும் பும்ரா தனது வழக்கமான ரன் அப் மற்றும் ஆக்ஷனில் சில மாற்றங்களைச் செய்து பந்து வீசியது கவனத்தை ஈர்த்தது. பேட்டர்களின் கவனத்தைத் திசைதிருப்ப பந்து வீச்சாளர்கள் இவ்வாறு வித்தியாசமாக முயற்சிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

​இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும்போது “இரண்டாவது நியூ பால் மூலம், முதல் நியூ பாலில் வீசியது போல் அவர் அபாயகரமாகத் தெரியவில்லை. வெலிங்டன் முதல் நாளில் அவர் மிகவும் அச்சுறுத்தலாகத் தெரிந்தார், இரண்டாவது இன்னிங்ஸிலும் அச்சுறுத்தலாகவே இருந்தார்”

- Advertisement -

“இரண்டாவது நியூ பால் வந்தபோது, அவரிடம் அந்த வேகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் 15 அல்லது 16 ஓவர்கள் வீசியுள்ளார்; ஒருவேளை அதன் தாக்கத்தை அவர் உணர்ந்திருக்கலாம். அங்குதான் இந்தியா தடுமாறுகிறது. இரண்டாவது நியூ பாலில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றால், மைதானத்தில் நீண்ட நேரம் செலவிட வேண்டியிருக்கும். இரண்டாவது முறை அவர் ஓடி வரும்போது சிரித்த முகத்துடன் இருக்கிறார். சில நேரங்களில் பேட்டரைத் திசைதிருப்ப பந்து வீச்சாளர்கள் வித்தியாசமாக ஏதாவது செய்வார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -