சச்சினை அவர் குடும்பம் நடத்தியது போல.. சூரியவன்சியை நடத்த வேண்டும்.. இல்லன்னா காலி – கவாஸ்கர் அறிவுரை

0
0

​வளர்ந்து வரும் புகழுக்கு மத்தியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், அவரது பேட்டிங் முன்னேற்றம் குறித்தும் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

​ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 பந்துகளில் சதம், 52 பந்துகளில் இரட்டை சதம் மற்றும் 28 சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.

- Advertisement -

​இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும்போது, “நண்பர்கள் வருவார்கள், புதிய நண்பர்கள் இணைவார்கள், விளம்பர ஒப்பந்தங்களும் நிறுவனங்களும் அவரைத் தேடி ஓடி வரும். அதெல்லாம் நல்லதுதான், சிறப்பாகச் செயல்படுவதால் கிடைக்கும் பலன்கள் அவை. அவரது குடும்பத்தினர் அவரை வைபவ் சூர்யவன்ஷியாகப் பார்க்காமல், வெறும் வைபவ்வாக நடத்துவது முக்கியம்”

“​குடும்பத்தினர் அவரை வைபவ் சூர்யவன்ஷியாக நினைக்கத் தொடங்கினால், அவருக்குத் தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார்கள் என்று அர்த்தம். சச்சின் டெண்டுல்கரைப் போல அவரும் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டும். சமீப காலமாக 25 அல்லது 26 ரன்களைக் கடந்த பிறகு எக்ஸ்ட்ரா கவர் திசையிலும் பந்தை அடிக்கத் தொடங்கியுள்ளார்”

- Advertisement -

“​முன்பெல்லாம் லாங் ஆஃப் மற்றும் ஸ்கொயர் லெக் திசைகளுக்கு இடையே மட்டுமே அடித்தார். இப்போது ஷார்ட் பால்களை பாயிண்ட் திசைக்கு மேலாக சிக்ஸர் அடிக்கவும், ராம்ப் ஷாட் மூலமாகவும் சிக்ஸர் அடிக்கிறார். ஆன் சைடில் மட்டும் ஆதிக்கம் செலுத்துபவராக இல்லாமல், அனைத்து திசைகளிலும் எதிரணியை அழிக்கும் பேட்டராக அவர் மாறுவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -