146 வருட கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான சாதனை.. முஜிப் பரிதாபம்.. ஆசிய கோப்பை!

0
3849
Mujeep

இன்று ஆசியக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது!

இன்று நடைபெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நேராக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும், அதே வேளையில் பங்களாதேஷ் அணி வெளியேறும் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிக்கு மெகதி ஹசன் மிராஸ் மற்றும் நஜீபுல் சாந்தோ இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க, 50 ஓவர்கள் முடிவில் 334 ரன்கள் குவித்தது பங்களாதேஷ்.

இதையடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி முதல் சுற்றில் முதல் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவரில் 245 ரன்களுக்கு மடங்கி, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் அணியின் டஸ்கின் அகமத் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் டஸ்கின் அகமத் கடைசி கட்டத்தில் பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தபொழுது அவரது ஓவரில் பந்தை தூக்கி சிக்ஸருக்கு அடித்த முஜீப் உர் ரகுமானுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. கிரீசுக்குள் ஆழமாகச் சென்று பந்தை அடித்த அவர், தவறுதலாக காலை ஸ்டெம்ப் மீது வைத்து ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இந்த முறையில் இவர் ஆட்டம் இழந்தது எந்த வகையிலும் மோசமான சாதனையில் பதிவாகவில்லை. ஆனால் இவர் மோசமான சாதனையில் இடம் பெற்றதற்கு முக்கிய நிகழ்வு, இவர் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய பொழுது ஆட்டம் இழந்த முறையால் வந்தது.

இந்தப் போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையில் வைத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. அந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் தோற்று தொடரை ஆப்கானிஸ்தான் அணி இழந்தது.

குறிப்பிட்ட அந்தத் தொடரின் இறுதி மற்றும் கடைசி போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் அடித்து, அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்திருந்த ரஷீத் கான் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தார் முஜீப். ஆனால் அதே போட்டியில் ஷாஹீன் ஷா அப்ரிடி வீசிய பந்தை, இதேபோல் கிரீசுக்குள் ஆழமாகச் சென்று விளையாட முயன்று ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார்.

இந்த வகையில்தான் முஜீப் 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் மோசமான ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். என்னவென்றால், தொடர்ந்து இரு போட்டிகளில் ஹிட் விக்கெட் ஆகிய முதல் வீரர் என்ற மோசமான சாதனையை செய்திருக்கிறார். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது!