இந்திய கிரிக்கெட்

யுவராஜ் சிங் அபிஷேக் சர்மா கிட்ட இதத்தான் சொல்லி இருப்பார்.. அதுதான் கலக்கலுக்கு காரணம் – பத்ரிநாத் தகவல்

இந்திய வீரர் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்திற்கு பின்னால் யுவராஜ் சிங் எப்படியான ஆலோசனையை கூறி இருக்கலாம் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா வெறும் 20 பந்துகளில் 340 ஸ்ட்ரைக் ரேட்டில் 68 ரன்கள் குவித்தார். அவருடைய ஆட்டம் ஒட்டுமொத்தமாக எதிரணியிடம் இருந்து போட்டியை பறித்துக் கொண்டு வந்து விடுகிறது.

யுவராஜ் சிங் இதைச் சொல்லி இருக்கலாம்

இதுகுறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசும் பொழுது ” யுவராஜ் சிங் அவருக்கு பேட்டிங் தொழில்நுட்பம் மற்றும் தந்திரோபாய ரீதியில் நிறைய உதவிகள் செய்திருக்கலாம். ஆனால் யுவராஜ் சிங் அபிஷேக் ஷர்மாவுக்கு அதிகம் உதவிய இடம் அவருக்கு தெளிவை கொடுப்பதாகவே இருந்திருக்கும். அதாவது அவர் நீ சிவப்பு பந்து கிரிக்கெட்டை விட்டு விட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்து என்று சொல்லி இருக்க வேண்டும்”

“மிகக் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் கூட இல்லாமல் டி20 கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தும் படி சொல்லி இருக்கலாம். அபிஷேக் சர்மாவுக்கு இந்த வடிவத்தில் இயல்பாகவே விளையாட வரும். இதைவிட ஒரு சிறந்த ஆலோசனையை வேறு யாரும் சொல்லி இருக்க முடியாது”

- Advertisement -

விராட் கோலி – ஹர்திக் பாண்டியா

“தற்போது ஒரு வடிவத்தில் மட்டும் விளையாடக் கூடிய வீரர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் காரணம். அவர்கள் திறமை குறித்த தெளிவு அவர்களுக்கு உண்டாகிறது. நீங்கள் பல வகையான கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது உங்களுக்கு அணுகுதல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு”

இதையும் படிங்க: சஞ்சுவை நினைச்சா பாவமா இருக்கு.. இஷான் வேற மாதிரி ஆளு.. இதான் நடக்க போகுது – ஸ்ரீகாந்த் பேச்சு

” இப்போது விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் ஒரே வடிவத்தில் மட்டும் விளையாடி தன்னுடைய ஆட்டத்தை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவும் இப்பொழுது டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாடி மிகச் சிறப்பாக வந்திருக்கிறார். அபிஷேக் ஷர்மாவும் அப்படியேதான் சிறப்பாக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts